12585 – கணிதம் ஆண்டு 4.

M.P.M.M.ஷிப்லி, கோ.கோணேசபிள்ளை (தமிழாக்கம்), ந. வாகீசமூர்த்தி, திருமதி ம.திருநாவுக்கரசு (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 2: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், கல்வி அமைச்சு, மலாய் வீதி, 1வது பதிப்பு, மே 1984. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

xi, 322 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×18 சமீ.

கணிதக் கல்வியின் புதிய போக்குகளுக்கேற்ப 1985 முதல் நடைமுறைக்கு வரும் புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல் 90 படிமுறைகளைககொண்டது. எண்களை அறிதல், வாசித்தல், எழுதுதல், இடப்பெறுமானம், எண்களை ஒப்பிடுதலும் வரிசைப்படுத்தலும், கணிதச் செய்கை, எண்ணுதலும் கோலங்களும், பணம், அளத்தல், வடிவமும் சமச்சீரும், வரைபு, அயலும் வரிசைப்படுத்தலும், திசைகளும் பருமட்டான படங்களும், சாதாரண பின்னம், உரோமன் இலக்கங்கள், பிரசினங்களைத் தீர்த்தல், எண்களை ஒப்பிடுதலும் வரிசைப்படுத்தலும் ஆகிய பாடங்கள் படிமுறைகளில் பயிற்சிகளுடன் இந் நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25364).

ஏனைய பதிவுகள்