வி.ச.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: கணிதக் கழகம், நாவற்குழி, கைதடி, 1வது பதிப்பு, கார்த்திகை 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 64 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×14 சமீ.
இந்தச் செயல்நூல் பாடசாலை மட்டத்தில் நடைமுறையிலிருக்கும் பாடத் திட்டத்திற்கு அமைவாக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டது. 45 படிமுறைகளாக அமைந்த எண்ணக்கருக்களை எண்கள், பரப்பளவும் கனஅளவும், கோவைகள்-காரணிகள்-சமன்பாடுகள், பல்கோணிகள், விகிதம்- சதவீதம்-வட்டி, அமைப்புக்கள், நிகழ்தகவும் புள்ளிவிபரவியலும், வரைபுகள், முக்கோணிகள், அளவிடைப் படங்கள் ஆகிய 10 தலைப்புகளில் வகைப்படுத்தி இச்செயல்நூலிலுள்ள பயிற்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மூன்று தவணைப் பரீட்சைகளுக்கும் உரிய மாதிரி வினாத்தாள்களும் விடைகளும் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27415).