அ.கருணாகரர் (மூலம்), க.புவனபூஷணம் (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், ஈச்சமோட்டை, 2வதுபதிப்பு, ஆண்டு விபரம்தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்:நாமகள்அச்சகம்,319,காங்கேசன்துறை வீதி).
iv, (4), 216 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
க.பொ.த.ப. (உயர்தர) வகுப்புக்குரிய வெப்பவியல் (அனைத்துலக ளுஐ அலகு
முறையில்) பகுதியே இந்நூலாகும். இதன் முதற் பதிப்பு யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரி ஆசிரியர் அ.கருணாகரர் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் இவ்விரண்டாவது பதிப்பு, அதே கல்லூரியின் ஆசிரியர் க. புவனபூஷணம் அவர்களால் மீள்பார்வையிடப்பெற்று அனைத்துலக முறை பற்றிய புதிய அதிகாரம், அனைத்துலக முறையில் வரையறைகளும் பௌதிக மாறிலிகளும், அனைத்துலக முறையில் பின்னிணைப்பாகப் போதிய பலவினப்பயிற்சிகள் ஆகிய மூன்றும் சேர்க்கப்பெற்று வெளியிடப்பட்டுள்ளது. பத்து
இயல்கள் கொண்ட இந்நூலின் அத்தியாயங்கள் வெப்பமானி இயல், திண்மங்களின் விரிவு, திரவங்களின் விரிவு, வாயுக்களின் விரிவு, கலோரியளவியல், நிலை மாற்றம் -ஈரப்பதன், வெப்பத்தின் பொறிமுறைச் சமவலு, சமவெப்பமாற்றம் வெப்பஞ்செல்லா நிலைமாற்றம், வெப்பக்கடத்தல்-மேற்காவுகை, கதிர்வீசல் ஆகிய தலைப்புகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38537).