12603 – பௌதிகப் புவியியற் றத்துவங்கள்.

F.J.மங்கவுசு (ஆங்கில மூலம்), W.L.ஜெயசிங்கம், ஏ.சுப்பிரமணியம் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1962. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

xxi, 610 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

F.J.Monkhouse அவர்களால் எழுதப்பெற்று லண்டன் University of London Press நிறுவனத்தால் வெளியிடப்பெற்ற The Principles of Physical Geography என்ற நூலின் தமிழாக்கம் இது. புவியோட்டின் பொருள், புவியின் அமைப்பு, எரிமலையியல், புவிமேற்பரப்பின் சிற்பத் தொழிற்பாடு, தரைக்கீழ் நீர், ஆறுகளும் ஆற்றுத் தொகுதிகளும், பனிக்கட்டியாற்றுத் தாக்கம், காற்றின் செயலும் பாலை நிலங்களும், கடற்கரையோரங்கள், ஏரிகள், சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு, சமுத்திர நீர், காலநிலை: பொது வியல்புகள், வெப்பநிலை, அமுக்கமும் காற்றுக் களும், ஈரப்பதனும் படிவு வீழ்ச்சியும், காலநிலை மாதிரிகள், மண், தாவரம், பிரித்தானியத் தீவுகளின் தாவர வகைகள், முடிவுரை ஆகிய பாடத்தலைப்புகளின்கீழ் உலகின் பௌதிக புவியியல் தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24698).

ஏனைய பதிவுகள்

Multiple Diamond Position Review

Posts Tjd 0 75 Carat Round And you can Baguette Diamond 14k Light Silver Multiple Row Wedding ring Later twentieth Millennium Not familiar Contemporary Beverage

11096 பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்: இரண்டாம் பாகம்.

ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் (வடமொழி மூலம்), காசிவாசி. செந்திநாதையர் (தமிழாக்கம்). தேவிகோட்டை: ஸ்ரீ அரு. சோமசுந்தரஞ் செட்டியார், 1வது பதிப்பு, வைகாசி 1908. (தமிழ்நாடு: செந்திநாதசுவாமி யந்திரசாலை, திருமங்கலம்). 185-400 பக்கம், விலை: இந்திய ரூபா