சரத் கொடகம (மூலம்), கணபதிப்பிள்ளை அசோகன் (தமிழாக்கம்). கொழும்பு 3: இலங்கை களப் பறவையியல் குழு, விலங்கியல் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: கருணாரத்ன அன் சன்ஸ்).
(8), 146 பக்கம், விளக்கப்படத் தகடுகள், விலை: ரூபா 441.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-8576-29-8.
இலங்கையின் பொதுப்பறவைகளை அடையாளம் காண்பதற்கான கைந்நூல். உடலுருவ அமைப்பு, வால், கால்கள், அலகு, பருமன் ஆகியவற்றைக்கொண்டு பறவைகளை அடையாளம் காணுதல், சிறகுகள், களப்பண்புகள், நிறங்கள், பறவைகளின் குரலொலி மற்றும் பறவைப் பாடல், பறத்தல் ஆகியவை பற்றிய அறிதல்கள் ஆகியவற்றுடன் பறத்தலிலும் கூர்மையாக அவதானிக்கத்தக்க மடித்துப்பறத்தல் (குடயிpiபெ), வட்டமிட்டுப் பறத்தல் (ர்ழஎநசiபெ), மிதந்து பறத்தல் (ளுழரசiபெ), வழுக்கிப் பறத்தல் (புடனைiபெ) ஆகிய வகைகள் பற்றிய அவதானிப்பு, உணவூட்டல், இடப்பெயர்ச்சி, இனப்பெருக்கம் ஆகிய பறவைகளின் நடத்தைக் கோலங்கள், பறவைகளின் வாழிடம், மற்றும் ஏனைய பண்புகள் பற்றி இந் நூல் விரிவாக விளக்கியிருக்கின்றது. மேலும் பறவைகளை அவதானிப்பதற்கு எவ்வாறு தங்களை ஆயத்தப்படுத்தவேண்டும், எவ்வாறு பறவைகளை முறையான வழியில் அவதானிப்பது, அவற்றை எப்படி அடையாளம் காண்பது ந-டீசைன ளுசi டுயமெய என்னும் இணைய வசதியைப் பயன்படுத்துதல், பறவைகளின் பெயர்கள் என இன்னோரன்ன பறவைகள் அவதானிப்புக்கான நடைமுறைக்கு ஏற்ற ஆலோசனைகளையும் இந்நூல் வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53474).