12612 – உயிரியல் திரட்டு Block 2 (Unit 2) புதிய பாடத்திட்டம்.

கே.வி.குகாதரன், ஆர். நரேந்திரன். கொழும்பு 13: குளோபல் பப்ளிக்கேஷன்ஸ், 195, ஆதிருப்பள்ளித் தெரு (Wolfendhal Street), 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (Colombo 13: Global Printers,195, Wolfendhal Street)

(6), 329 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ.

உயிர்ப் பல்வகைமை என்னும் பாடப்பரப்பு க.பொ.த. உயர்தர பாடத்திட்டத்தின்கீழ் உயிரியலின் அலகு 2 ஆக படிமுறை செய்யப்பட்ட புதிய வார்ப்பாகும். உயிரியலின் மிக முக்கிய இப்பாடப்பரப்பிலே முன்னைய தாவரவியலில் விலங்கியலில் காணப்பட்ட வெவ்வேறு பெரும் பிரிவுகள் ஒன்றாக்கப்பட்டுள்ளதுடன் உயிரின காப்பு, அழிவு பற்றியும் புதிய விடயதானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வகையில் இந்நூல் உயிர்ப்பல்வகைமை என்றால் என்ன?, பாகுபாடும் பெயரீடும், உயிர்ப்பல்வகைமை பற்றிக் கற்கவேண்டியதன் அவசியம், உயிர்ப்பல்வகைமை பரிமாணம் ஆகிய இயல்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38923).

ஏனைய பதிவுகள்

15274 யாழ்/இணுவில் மத்திய கல்லூரி: பவளவிழா மலர் 1930-2005.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: இணுவில் மத்திய கல்லூரி, இணுவில், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்). xii, (6), 174 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×21 சமீ.