வீ.ச.சிவகுமாரன். கொழும்பு 6: வேதா சிவகுமாரன், 6/1, Dr. E.A.கூரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).
152 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.
மாணவர்களின் பரீட்சைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் பத்து அலகுகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் முறையே சுவாசக் கட்டமைப்புகள், விலங்குகளில் போசணை, விலங்குகளில் கொண்டுசெல்லுதல், நைதரசன் கழிவுகளின் வெளியேற்றம், ஒருசீர்த்திடநிலை, நரம்பு இயைபாக்கம், இரசாயன இயைபாக்கம், புலன் அங்கங்கள், உடலைத் தாங்கும் முறையும் அசைவும், இனப்பெருக்கம் ஆகிய பாடப் பரப்புகள் தனித்தனி இயல்களில் விளக்கப்படு கின்றன.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30113).