எஸ்.செல்வநாயகம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மாசி 1990. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, டீ.யு. தம்பி வீதி).
(4), 81 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 24×18.5 சமீ.
கல்விப் பொதுத் தராதர உயர்தர விலங்கியல் பாடத்திட்டத்திற்கமைவாக எழுதப் பட்டுள்ள இந்நூலில், கரப்பான்-தேரை-மனிதன் ஆகிய மூன்று உயிரினங்களின் ஒப்பீட்டு உடலமைப்பியலும் உடற்றொழிலியலும் பற்றிப் பொதுவாகவும், இவ்வுயிரினங்களின் குருதிச் சுற்றோட்டத்தொகுதி, நிணநீர்த் தொகுதி பற்றி ஆழமாகவும் ஒன்பது அலகுகளில் விளக்கமளிக்கப்பட்டுள்ளன. இவை அறிமுகம், சுற்றோட்டத்தொகுதியின் அவசியமும் அதன் கூறுகளும், சுற்றோட்டத்தொகுதியின் கூறுகள் (தொடர்ச்சி), கரப்பானின் சுற்றோட்டத்தொகுதி, முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் குருதிச் சுற்றோட்டத் தொகுதி, நாடித் தொகுதி, நாளத் தொகுதி, நிணநீர்த் தொகுதி, மனிதனின் முதிர் மூலவுருச் சுற்றோட்டம் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35398).