12620 – யோகாசனமும் மூலிகையின் மகத்துவமும்.

சனா சொக்கலிங்கம். வவுனியா: றூபி கிருஷ்ணலிங்கம், ஆசிரியை, சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம், 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1994.(வவுனியா: நியூ வன்னி குவிக் அச்சகம்).

(4), 266 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 175.00, அளவு: 21.5×14 சமீ.

யோகாசனமணி சனா சொக்கலிங்கம் அவர்களின் இந்நூல் 22 தலைப்புகளின்கீழ் யோகாசனம் பற்றியும், மேலும் 8 தலைப்புகளில் மூலிகைகளின் மகத்துவம் பற்றியும் விளக்கமளிக்கின்றது. ஆழ்நிலைத் தியானம், சூரிய நமஸ்காரம், கவியோகி சுவாமி சுத்தானந்த பாரதியார் விளக்கம், மகரிஷி யோகசுவாமியின் குருபூசை விளக்கம், பிராணாயாமப் பயிற்சி, யோகச் சிறப்புக் கற்பனைகள், யோகாசனமும் வாழ்வும், எல்லோரும் ஆசனம் செய்யலாம்-சில நிபந்தனைகள் உண்டு, லுழபய கழச யடடஇ மில்க்வைற் கலாநிதி க.கனகராசா கடிதம், மகாத்மா காந்தி அடிகளின் கருத்துரைகள், பெண்களுக்கும் யோகாசனம் வேண்டும், ஆசன அட்டவணை, ஹடயோக விளக்கம், கற்பூரத் தீபவொளி- 28 யோகாசனங்களும், சில விதிமுறைகள், ஆசனப் பயிற்சியின் முதல் அங்கம், யோகாசனங்கள் பழகுவதால்? லுழபய ளுயடிய டுநவவநசஇ வாழ்த்துச் செய்திகள் 10, யோகாசனங்கள் 28 பட விளக்கத்துடன் (கும்பிடாசனம் தொடங்கி சவசாந்தி வரை), தியான முறை ஆகிய தலைப்புகளில் யோகாசனமணி அவர்கள் இந்நூலில் யோகாசனம் பற்றி விரிவாக விளக்குகின்றார். தொடரும் நூலின் அடுத்த பகுதியில் செலவில்லாத சுலப வைத்தியம், உணவே மருந்து, மூலிகையின் மகத்துவம், பக்கவிளைவின்றி நோய் தீர்க்கும் மூலிகைகள், தேனும் குங்குமப்பூவும், மூலிகைச் சத்துக்கள், கைமருந்து சூரணம், விசேஷசிகிச்சைகள் சில ஆகிய எட்டுத் தலைப்புகளில் மூலிகையின் மகத்துவம் பற்றி விளக்கியிருக்கின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38408)

ஏனைய பதிவுகள்