. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்). கொழும்பு: கொள்கை திட்டமிடல், அமுலாக்கல் அமைச்சு, சௌக்கிய அமைச்சு, 1வது பதிப்பு, ஜுன் 1994. (கொழும்பு: குணரத்ன ஓப்செட் லிமிட்டெட்).
(4), 101 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 92- 806-3117-9.
பத்து அத்தியாயங்களில் சமூக சுகாதார நலன் சார்ந்து எழுதப்பட்டுள்ள இந் நூல் அடிப்படை சுகாதார/போஷாக்கு நடைமுறைகள் பற்றிய தகவல்களை வழங்குகின்றது. கர்ப்பகாலத்திற்கும் பாலூட்டும் காலத்திற்குமுரிய ஆகாரங்களும் பராமரிப்பும், தாய்ப்பாலூட்டும் நடைமுறைகள், துணை ஆகாரமூட்டும் நடைமுறைகள், குடும்பத்துக்கு உகந்த உணவுப்பொருட்களைத் தேர்ந்தெடுத்தல், நோயுற்ற குழந்தைகளுக்கு உணவூட்டுதல், சமுதாய வாரியாக குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணித்தலும் ஊக்குவித்தலும், நீர் வடிகால் மற்றும் சுகாதார நடைமுறைகள், வீட்டுணவுப் பாதுகாப்பு, குடும்பத் திட்டம், கல்வியும் பாடசாலை சார்ந்த நடவடிக்கைகளும் ஆகிய அத்தியாயங்களாக இந்நூல் வகுத்து விளக்கப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34583.