12624 – நீரிழிவு நோயாளர் பராமரிப்பு.

கா.வைத்தீஸ்வரன். கொழும்பு: கா.வைத்தீஸ்வரன், ஆற்றுப்படுத்தல் நிலையம், 7, அல்பேர்ட் பிளேஸ், தெகிவளை, 1வது பதிப்பு, ஜுன் 2016. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

109 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 275., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-44396-7-2.

நலப் பணியாளர், சமூக சேவையாளர், ஆசிரியர், நீரிழிவு நோய்க்கு இலக்காகியவர், அவர்தம் குடும்பத்தினர் ஆகியோருக்கான கைந்நூல். நீரிழிவு வருமுன் காப்போம், சலரோகம்-ஒரு கண்ணோட்டம், வருமுன் காப்போம்-ஆரோக்கியத்தை விருத்தி செய்வோம், நீரிழிவு நோயுடன் இயல்பு வாழ்க்கை வாழலாம்? எப்படி? நீரிழிவு நோயாளர் பராமரிப்பு, நோயாளர் பராமரிப்பில் சில முக்கிய குறிப்புகள், நீரிழிவுசிக்கல்கள் தவிர்ப்போம், நீரிழிவு நோய்-சருமம், பற்கள், பாதங்கள் யாவற்றையும் பாதுகாப்போம், நீரிழிவு நோயாளருக்கான உணவுகள், உணவுப் பழக்கவழக்கம்- முக்கிய குறிப்புகள், நீரிழிவு நோயாளர்களுக்கான சில உணவுகள்- செய்முறை விளக்கம், உடல் உழைப்புடனான வாழ்க்கை ஆகிய 10 அத்தியாயங்களில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக, நீரும் எமக்கு மருந்தாகும், எமது ஆரோக்கியத்தை மீளாய்வு செய்வோம், மனநலம் இருதயத்தைப் பாதுகாக்கும், உடற் பருமன் முற்றாகத் தவிர்ப்போம், நீரிழிவு நோயாளர்களுக்கான உடற்பயிற்சியின் அவசியம் ஆகிய ஐந்து கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேய மருத்துவத்தை விரும்பாதவர்களுக்கு மாற்றீடாக இயற்கையோடு இணைந்த உள்ளுர் மருத்துவ முறையைப் பின்பற்ற இந்நூல் வழிகாட்டியுள்ளது.

ஏனைய பதிவுகள்