12637 – மருந்தில்லா மருத்துவம்.

ந.சிவசுப்பிரமணியம் (புனைபெயர்: வாணி). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம்).

xxvi, 140 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4096-11-0.

சித்த ஆயர்வேத மருத்துவ முறை 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்ததென்பர். நோய் பாதிப்பு ஏற்படாமல், பக்க விளைவுகள் ஏற்படாவண்ணம் குணமாக்க பல அரிய மூலிகைகள் இருக்கின்றன. அவை பற்றிய விபரங்களை 15 அத்தியாயங்களில் இலகுவாக அனைவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் ஆசிரியர் இந்நூலில் விபரித்துள்ளார். அன்றாட வாழ்வில் பயன்படும் பல உணவுப் பொருட்களே இங்கு நோய்தீர்க்கும் மருந்தாகின்றன. காய்கறிகள், பழவகைகள், மலர்கள், வேர்கள், கிழங்குகள், கீரை வகைகள் எனப் பல மருத்துவ விடயங்களை எளிமையான தமிழ்நடையில் சாதாரண மக்களும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் மருத்துவர் வாணி இந்நூலை எழுதியிருக்கிறார். மருத்துவ குணமுள்ள சில மூலிகைகள், மருத்துவ குணமுள்ள சில பட்டைகள், எனது 36 வருட சேவையில் கையாண்ட சில மருந்துகள், மருத்துவ குணமுள்ள சில காய்கறிகள், மருத்துவ குணமுள்ள சில பழங்கள், மருத்துவ குணமுள்ள சில வேர்கள், மருத்துவ குணமுள்ள சில மலர்கள், மருத்துவ குணமுள்ள சில கிழங்குகள், மருத்துவ குணமுள்ள சில மர வகைகள், போர்க்காலத்தில் மருந்துகள் தடைசெய்யப்பட்டபோது நாம் பயன்படுத்திய சில மூலிகைகள், மருத்துவ குணமுள்ள மூலிகைகளின் இலகுவான பலன்கள், மருத்துவ குணமுள்ள கீரைகள், மருத்துவ குணமுள்ள இலைகள், உடல் பருமனைக் குறைத்திட, அதிகரிக்க இயற்கை வைத்தியம், பொதுவான சில மருத்துவக் குறிப்புகள் ஆகிய 15 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்