12638 – கொங்கிறீற்றின் முக்கிய தன்மைகளும் அதன் கலவை விதானமும்.

வே.நவரெத்தினராசா. யாழ்ப்பாணம்: பேராசிரியர் வே.நவரெத்தினராசா, குடிசார் பொறியியல்துறை, பொறியியல் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம்).

iii, 59 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

கொங்கிறீற்றுக் கட்டடங்களும் பாலங்களும் குறுகிய காலத்தில் பழுதடைவதற்கு கொங்கிறீற்றின் தன்மைகளைப்பற்றித் தொழில்நுட்பவியலாளர்கள் மத்தியில் காணப்படும் விளக்கக்குறைவும் ஓர் முக்கிய காரணமாகும். அத்தகையதொரு குறைபாட்டை நிவர்த்திசெய்யும் வகையில் இலகுதமிழில் இந்நூல் வெளிவந்துள்ளது. கொங்கிறீற்றின் முக்கிய மூலப்பொருட்களான சீமெந்து, பெரிய ஃசிறிய துணிக்கை களைப் பற்றியும் விளக்கம் தரப்பட்டுள்ளன. உடன் கலந்த கொங்கிறீற்றில் பேணப்படவேண்டிய தன்மைகளும் கொங்கிறீற்று கடினமடைந்தபின் அதன் தன்மைகளும், இவற்றை பரிசோதிக்கும் முறைகளும் விபரிக்கப்பட்டுள்ளன. சிறந்த தன்மைகளைக் கொண்ட கொங்கிறீற்றுக் கலவை தயாரிக்கும் முறையும் விளக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பயன்படுத்தப்படும் கொங்கிறீற்று தொடர்பான பிரித்தானியஃ இலங்கை நியமங்களும் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. இவை இந்நூலில் கொங்கிறீற்று, போட்லந்து சீமெந்து, கொங்கிறீற்றுத் துணிக்கைகள், நீர், உடன்கலந்த கொங்கிறீற்றின் தன்மைகள், கடினப்பட்ட கொங்கிறீற்றின் தன்மைகள், கொங்கிறீற்றுக் கலவை விதானம், கொங்கிறீற்று கலத்தல், கொங்கிறீற்று நியமங்கள் ஆகிய ஒன்பது இயல்களில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30392)

ஏனைய பதிவுகள்

12056 – சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்.

சி.பத்மநாதன், க.இரகுபரன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xxii,

14430 நன்னூன் மூலமும் விருத்தியுரையும்.

சங்கரநமச்சிவாயப் புலவர் (விருத்தியுரை), சிவஞான சுவாமிகள் (திருத்தியவர்), ஆறுமுக நாவலர் (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், நல்லூர், மீள்பதிப்பு, ஐப்பசி 1947. (சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை). 292 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14938 பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும் மொழியியலும்.

ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20.5×14 சமீ.,