12639 – இலங்கையில் பழப்பயிர்களைப் பாதிக்கும் பீடைகளும் அவற்றைக் கட்டுப்படுத்தலும்.

G.A.W.விஜேசேகர, ஜயந்தா இளங்கோன் மெனிக்கே (மூலம்), சீரங்கன் பெரியசாமி (தமிழாக்கம்). பேராதனை: விவசாயஅமைச்சு, விவசாயத் திணைக்களம், 1வது பதிப்பு, 2001. (பெரதெனிய: விவசாய அமைச்சின் அச்சகப் பிரிவு, கன்னொருவை).

(6), 72 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×20 சமீ., ISBN: 955-9282-04-2.

இலங்கையின் பழச்செய்கையின் பிரதான பீடைகள் தொடர்பான விஞ்ஞானத் தகவல்கள் இப்பிரசுரத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாமரத்தைப் பாதிக்கும் மாம்பழ ஈ, மாவிலைத் தத்தி, தண்டு துளைப்பான் புழு, மாவிதை வண்டு, மாவிலை வண்டு, மாவிலை சுருட்டி வண்டு ஆகியவை பற்றியும், சித்திரசுப் பயிர்களைப் பாதிக்கும் சித்திரசு வண்ணாத்திப்பூச்சி, சித்திரசு இலைச்சுருங்கமறுப்பி, சித்திரசு கறுப்பு ஈ, சித்திரசு இலைச்சுருட்டிப் புழு, சித்திரசு அழுக்கணவன், சித்திரசு செதிற்பூச்சி, சித்திரசு வெண்மூட்டுப் பூச்சி, சித்திரசு சிவப்புச் சிற்றுண்ணி, காய்துளை அந்து ஆகியவை பற்றியும், வாழையினத்தைத் தாக்கும் வாழைக் கிழங்கு நீள்மூஞ்சி வண்டு, வாழைத்தண்டு வண்டு ஆகியவை பற்றியும், அன்னாசிப் பயிரைத் தாக்கும் வெண்மூட்டுப் பூச்சி பற்றியும், கொடித் தோடையைத் தாக்கும் கொடியை வெட்டும் வண்டு பற்றியும், மாதுளையைத் தாக்கும் காய்துளைப்பான் பற்றியும், அம்பரெல்லா மரத்தைத் தாக்கும் இலைச் சுருட்டிப்புழு, இலைகூடுகட்டிப் புழு, இலையரிப்புழு ஆகியவை பற்றியும், பாலாக்காய் துளைப்புழு, ஆனைக்கொய்யா மூட்டுப் பூச்சி, பப்பாசி செதில் பூச்சி ஆகியன பற்றியும் முள்ளு அன்னமுன்னா, கொய்யா, திராட்சை, ரம்புட்டான், விளாம்பழம் போன்ற ஏனைய பழங்களில் காணப்படும் பிரதான பீடைகள் பற்றியும் இந்நூல் விளக்கமான தகவல்களைத் தருகின்றது. இறுதியில் பழப்பயிர்களைப் பாதிக்கும் பீடைகளைக் கட்டுப்படுத்த விவசாயத் திணைக் களத்தினால் சிபார்சு செய்யப்பட்ட பீடைநாசினிகள் பற்றிய விபரங்கள் தரப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34517)

ஏனைய பதிவுகள்