12641 – சேதனப் பசளைகள்.

S.T.திசாநாயக்க, ராஜகருணா தொலுவீர, சீரங்கன் பெரியசாமி. பேராதனை: விவசாயத் திணைக்களம், விவசாய காணி அமைச்சு, த.பெ.எண் 18, 1வது பதிப்பு, 2000. (பேராதனை: விவசாயத் திணைக்கள அச்சகம், கண்ணொறுவை).

(2), 18 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 5.00, அளவு: 21×14.5 சமீ.

மண் சேதனப் பொருட்களிலிருந்து கிடைக்கும் நன்மைகள், சேதனப் பசளைகளின் வகைகள், நெற்செய்கையில் வைக்கோலை இடல், தழைப் பசளைகளை இடும்போது அவதானிக்கவேண்டிய அம்சங்கள், கால்நடை எருவைப் பயன் படுத்தும்போது கடைப்பிடிக்கவேண்டிய சில முக்கியமான அம்சங்கள், சேதனப் பொருட்களைக் கூட்டெருவாக்கல் (வீட்டு, நகர்ப்புறக் கழிவுகளுக்கு), கூட்டெருவைத் தயாரிக்கும் முறை, குழிமுறை, குவியல் முறை, அதிக வெப்ப முறை, சிறிளவில் கூட்டெருத் தயாரித்தல்- பீப்பாய் முறை, சேதனப் பசளைகளை மாத்திரம் பயன்படுத்தல் ஆகிய தலைப்புகளில் இந்நூல் சேதனப் பசளைகள் பற்றிய விரிவான விளக்கங்களை வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32716).

ஏனைய பதிவுகள்