12643 – சத்துணவுகள்.

மலர் சிவராசா. மண்டூர்: மலர் சிவராசா, மலரகம், 1வது பதிப்பு, 1994. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).

(8), 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21ஒx14 சமீ.

சோளத்தில் தயார் செய்யக்கூடிய சத்து உணவுகள், இறுங்கில் தயார்செய்யக்கூடிய உணவுகள், குரக்கனில் தயாரிக்கும் சத்துணவுகள், மரவள்ளியில் சுவையான சத்துணவுகள், புடிங் வகைகள், சோயா அவரையில் சுவையுள்ள உணவுகள், பழங்களையும் காய்கறிகளையும் பாதுகாக்கும் முறைகள், கஞ்சி வகை,சம்பல் வகை, ஈரப்பலாக்காயில் கட்லெட் ஆகிய பத்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. விவசாயத்தில் டிப்ளோமா பட்டம்பெற்ற திருமதி மலர் சிவராசா விவசாயத் திணைக்களத்தில் பல ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவரது கணவர் அமரர் அ. சிவராசா அவர்களும் விவசாயப் போதனாசிரியராக பல ஆண்டுகாலம் பணி புரிந்தவர். விவசாயத்துறையில் அறிவும், ஆற்றலும், அனுபவமும் பெற்ற மலர் சிவராசா எடுத்துக்கொண்ட அரிய முயற்சியின் பயனாக உருவாக்கிய இந்நூலில் சாமான்ய மக்களின் உணவாகக் கருதப்படும் தானியங்கள், கிழங்குவகைகள், காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கக்கூடிய போசாக்கும், ருசியும், கவர்ச்சியும் கொண்ட பல்வேறு உணவு வகைகளைப்பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்கள் அனைத்தும் இலகுவாகப் பயிரிடக் கூடியதும், மலிவாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாயும் இருப்பது இந்நூலின் இன்னுமோர் சிறப்பம்சமாகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14754. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 007171).

ஏனைய பதிவுகள்

master Blackjack Rules

Content Online uk american poker v | Myth: Youve Got To Be A Mathematical Genius In Order To Be A Card Counter Console Blackjack In