12657 – நிதிக் கணக்கீட்டுக்கோர் அறிமுகம்: கணக்கீட்டு முதன்மைகள், இலங்கை கணக்கீட்டு நியமங்கள் .

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: மொட் ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 2வது பதிப்பு, ஜுலை 1999, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). (

4), 80 பக்கம், விலை: ரூபா 90.00, அளவு: 21.5×14 சமீ.

நிதிக் கணக்கீட்டுக்கோர் அறிமுகம், கணக்கீட்டு முதன்மைகள் (எண்ணக்கருக்கள், கணக்கீட்டு மரபுகள்), கணக்கிட்டு உள்ளீடுகள், கணக்கீட்டு செயன்முறை வருமானங்களினதும் செலவுகளினதும் பாகுபாடு, இணைதல் எண்ணக்கரு, இலங்கை கணக்கீட்டு நியமம் (இ.க.நி.), இ.க.நி. 3, இ.க.நி. 5, இ.க.நி. 8, இ.க.நி. 9, இ.க.நி. 10, இ.க.நி. 12 ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் கு.கலைச்செல்வன், யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையின் நாரந்தனை கிழக்கு கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பு 7, டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38014).

ஏனைய பதிவுகள்