12657 – நிதிக் கணக்கீட்டுக்கோர் அறிமுகம்: கணக்கீட்டு முதன்மைகள், இலங்கை கணக்கீட்டு நியமங்கள் .

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: மொட் ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 2வது பதிப்பு, ஜுலை 1999, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). (

4), 80 பக்கம், விலை: ரூபா 90.00, அளவு: 21.5×14 சமீ.

நிதிக் கணக்கீட்டுக்கோர் அறிமுகம், கணக்கீட்டு முதன்மைகள் (எண்ணக்கருக்கள், கணக்கீட்டு மரபுகள்), கணக்கிட்டு உள்ளீடுகள், கணக்கீட்டு செயன்முறை வருமானங்களினதும் செலவுகளினதும் பாகுபாடு, இணைதல் எண்ணக்கரு, இலங்கை கணக்கீட்டு நியமம் (இ.க.நி.), இ.க.நி. 3, இ.க.நி. 5, இ.க.நி. 8, இ.க.நி. 9, இ.க.நி. 10, இ.க.நி. 12 ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் கு.கலைச்செல்வன், யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையின் நாரந்தனை கிழக்கு கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பு 7, டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38014).

ஏனைய பதிவுகள்

12237 – எதிர்கால உலகமும் நாமும்.

அ.சி.உதயகுமார். சுன்னாகம்: Institute of Historical Studies வேதராணியார் வளவு,உடுவில், 1வது பதிப்பு, நவம்பர் 1991. (யாழ்ப்பாணம்: அருண் பிரின்டர்ஸ்). xi, 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ. இந்நூலில் ‘நியூக்கிளியர்

12289 – இலங்கையில் தமிழர் உயர்கல்வி.

ஹிலறி குறூஸ் (ஆங்கில மூலம்), கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (தமிழாக்கம்). கொழும்பு 12: சுதந்திரன் வெளியீடு-5, 194 ஏ, பண்டாரநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஆனி 1975. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194 ஏ,