12685 – ஐரோப்பிய ஓவிய வரலாற்றுச் சுருக்கம்.

R.H.விலென்ஸ்கி (ஆங்கில மூலம்), யு.ஜோன் ஜோர்ஜ் (தமிழாக்கம்). கொழும்பு: யு.ஜோன் ஜோர்ஜ், 7/13, ஹேன வீதி, கல்கிசை, 1வது பதிப்பு, மாசி 2002. (கொழும்பு: இசுரு என்டர்பிரைஸஸ்).

76 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 100.00, அளவு: 20.5×14.5 சமீ., ஐளுடீN: 955-97879-0-x.

கிறிஸ்துவுக்கு முந்திய காலம் தொடக்கம் 20ஆம் நூற்றாண்டு வரையுமுள்ள காலத்தில் ஐரோப்பிய ஓவியம் அடைந்த வளர்ச்சியை இந்நூல் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கின்றது. உலகறிந்த ஓவியர்களான மைக்கெல் ஆஞ்சலோ, றவாயேல், பிக்காசோ போன்ற தலைசிறந்த ஓவியர்களது படைப்புகள் பற்றியும், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் ஓவியக் கலைக்கான பங்களிப்புப் பற்றியும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவிற்கு முந்திய ஓவியம், இடைக்கால கிறிஸ்தவ ஓவியம், மறுமலர்ச்சி ஓவியம், 17ஆம் நூற்றாண்டு ஒவியம், 18ஆம் நூற்றாண்டு ஒவியம், 19ஆம் நூற்றாண்டு ஒவியம், 20ஆம் நூற்றாண்டு ஒவியம், மாதிரி வினாக்கள் ஆகிய எட்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35924).

ஏனைய பதிவுகள்

14466 ஆயிரம் வேரும் அருமருந்தும்.

கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம். திருக்கோணமலை: சுதேச வைத்தியத் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2016. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 250 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு:

14972 மனப்பால்.

கா.பொ.இரத்தினம். வேலணை: கா.பொ.இரத்தினம், பாராளுமன்ற உறுப்பினர், 1வது பதிப்பு, ஆவணி 1972. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி). 32 பக்கம், விலை: 60 சதம், அளவு: 20.5×13.5 சமீ. இலங்கையின் தேசிய

14202 தமிழ் வேதப்பாமாலை.

அருள் சுவாமிநாதன் (தொகுப்பாசிரியர்). அச்சுவேலி: இடைக்காடு இந்துநெறிக் கழகம், இடைக்காடு, 1வது பதிப்பு, மார்ச் 1995. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2 காலி வீதி, வெள்ளவத்தை). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12101 – கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி வரசித்தி விநாயகர் புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக மலர்.

த.இராஜதுரை, அ.பிரபாகரன் (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (கொழும்பு 6: எஸ்.பிரின்ட், 4C-1,Fussells Lane). 80 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14103 இந்து தருமம் 2001.

சோ.ரவீந்திரன், பரா.ரதீஸ் (இதழாசிரியர்கள்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2001. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை). xix, 106+30 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,