R.H.விலென்ஸ்கி (ஆங்கில மூலம்), யு.ஜோன் ஜோர்ஜ் (தமிழாக்கம்). கொழும்பு: யு.ஜோன் ஜோர்ஜ், 7/13, ஹேன வீதி, கல்கிசை, 1வது பதிப்பு, மாசி 2002. (கொழும்பு: இசுரு என்டர்பிரைஸஸ்).
76 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 100.00, அளவு: 20.5×14.5 சமீ., ஐளுடீN: 955-97879-0-x.
கிறிஸ்துவுக்கு முந்திய காலம் தொடக்கம் 20ஆம் நூற்றாண்டு வரையுமுள்ள காலத்தில் ஐரோப்பிய ஓவியம் அடைந்த வளர்ச்சியை இந்நூல் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கின்றது. உலகறிந்த ஓவியர்களான மைக்கெல் ஆஞ்சலோ, றவாயேல், பிக்காசோ போன்ற தலைசிறந்த ஓவியர்களது படைப்புகள் பற்றியும், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் ஓவியக் கலைக்கான பங்களிப்புப் பற்றியும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவிற்கு முந்திய ஓவியம், இடைக்கால கிறிஸ்தவ ஓவியம், மறுமலர்ச்சி ஓவியம், 17ஆம் நூற்றாண்டு ஒவியம், 18ஆம் நூற்றாண்டு ஒவியம், 19ஆம் நூற்றாண்டு ஒவியம், 20ஆம் நூற்றாண்டு ஒவியம், மாதிரி வினாக்கள் ஆகிய எட்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35924).