12687 – பிரதிமைக் கலை.

க.இராசரத்தினம். திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, நவம்பர் 1999. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்).

x, 121 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

‘பிரதிமைக்கலை” எனும் இந்நூலை பிரதிமைக்கலைமாமணி க. இராசரத்தினம் அவர்கள் எழுதியுள்ளார். அவரால் வரையப் பெற்றதும் உதாரணத்திற்கெனக் கையாளப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் பலவும் அடங்கலாக இந்நூல் அமைகிறது. முன்னாள் சித்திர ஆசிரியராகவும், 1949ம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் கன்னியர்மடம் மகளிர் கல்லூரியில் இயங்கிய எஸ்.ஆர். கனகசபையின் வின்சர் ஓவியக் கழகத்தின் விரிவுரையாளராக இயங்கிய இவர் அதன் இறுதிக் காலமான 1955ம் ஆண்டு வரை இயங்கியவர். முன்னாள் சித்திரப் பாடத்திற்கான வித்தியாதிகாரியாகவும் பணியாற்றிய இவரின் பங்களிப்பிற்காக 1999இல் நடந்த தமிழ் இலக்கிய விழாவில் ஆளுநர் விருது வழங்கப்பட்டது. இவரால் வரையப்பட்ட பிரதிமை ஒவியங்கள் பலவும் புகழ் பெற்றவை. யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெற்றுள்ள, முன்னாள் யாழ். பல்கலைக் கழக உபவேந்தர்களான, கலாநிதி க. கைலாசபதி, பேராசிரியர் துரைராஜா ஆகியோரின் பிரதிமை ஒவியங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. ‘பிரதிமைக்கலை நரம்பு வெடிக்கும் பிரச்சினைக்குரிய கலை. இது புகைப்படம் போல் அமையலாகாது. ஆக்கமுறையி லமைத்தல் வேண்டும்” எனக் கூறுகிறார் இராசரத்தினம். வின்ஸர் ஆட்கிளப்புடன் இணைந்து பிரதிமை ஒவியம், ஒவியத்தொகுப்பமைவு, நீர்வண்ணப் பிரயோகம் என்பனவற்றில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற இராசரத்தினத்தின் ஓவியங்கள் கிராமத்திற்குத் திரும்பும் வண்டில் (1951 தைலவர்னம்), பொதுக்கிணற்றில் குளித்தல் (1959 தைலவர்ணம்) திருவெம்பாவை (1951 தைலவர்னம்) இதற்கான சிறப்பான உதாரணங்களாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30941. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 007257).

ஏனைய பதிவுகள்

Idet Fungerer Postordrebrude?

Content Hvilke Udvikling Er Heri Landbrug For Til Verifikation Af Min Profil? Fortil Bebyggelsesprocent Af Ægteskaber Med Postordre Ender I kraft af Skilsmisse? Koreanske Kvinder