12688 – இசைத்தமிழ்ச் சிந்தனைகள்: தமிழரின் இசை மரபு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு.

கௌசல்யா சுப்பிரமணியன். கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன்புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன்புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxxii, 297 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21.5 x 14 சமீ., ISBN: 978-955-659-570-3.

2000 ஆண்டுகளுக்கும் முன்னரே பெரும் வளர்ச்சி அடைந்திருந்த தமிழிசையின்அடித்தள அமைப்பையும் அதிலிருந்து படிப்படியாக ஓங்கி வளர்ந்து செழித்த வரலாற்றையும் செவ்விய முறையில் சித்திரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.சங்கத் தமிழ்ச் சமூகத்தில் இசை-மகளிரின் நிகழ்த்துக் கலைச் செயற்பாடுகளைமையப்படுத்திய ஒரு பார்வை, தமிழரின் இசை மரபு-வரலாறும் வளர்ச்சியும்,இசைத்தமிழ் வரலாற்றில் நாட்டாரிசையும் செவ்வியல் இசையும், இசைத்தமிழ்ப்பாடல் மரபு-தொல்காப்பியத்தை மையப்படுத்திய ஓர் பார்வை, கவிப்பாவும் தமிழரின் இசைமரபும், தேவபாணி, நரம்பின் மறை-யாழ் முதல் வயலின் வரை, சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை, சிலப்பதிகார வரிப்பாடல்கள், சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை, பக்திகால இசைமரபின் மூலங்கள் பற்றிய தேடல், தமிழில் இறைபுகழ் பாடும் மரபு-இலக்கணநிலைசார் வரலாற்றுப் பார்வை, தமிழில் பக்தியிசை மரபும் காரைக்காலம்மையாரும், தேவாரப் பண்ணிசை மரபு, மணிவாசகரின் பண்சுமந்த பாடல்கள், பரம்பொருள் தத்துவத்தில் பண்ணும் பரதமும்,விருத்தத்தின் விஸ்வரூபம், தமிழரின் இசைமரபும் கம்பரும், குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் இசைப்பாடல்கள், தமிழ்க் கீர்த்தனை வகைகளும் அவற்றில் பயிலும் அணிகளும்,புலம்பெயர் சூழல்களில் தமிழர் கலை மரபுகளின் பேணுகை-இசை மற்றும் நடனம் ஆகிய கலைகளின் பயில்நிலைகளைமையப்படுத்திய பார்வை, தமிழரின் இசைமரபில் ஆய்வியல் அணுகுமுறைகள்- ஓர் அறிமுகக் குறிப்பு, பேராசிரியர் சிவத்தம்பியவர்களின் பார்வையில் தமிழரின் இசைமரபு, மதிப்புரை:அநுபவம் தொற்ற வைக்கும் கீதங்கள்-‘கரிசல் குயில்கள்”பாடல்கள் ஒலிப்பேழை, வாழ்த்துரை: ‘விருது பெறும் விரல்கள்”-வயலினிசை வித்தகர் கலைமாமணி பரூர் எம்.எஸ்.அனந்தராமன் அவர்கள், அணிந்துரை: கலாபூஷணம் இராஜமணி சிங்கராஜா அவர்களின் தெய்வீகக் கீர்த்தனைகள், திறனாய்வுரை: கலாநிதி மீரா வில்லவராயரின் கர்நாடக சங்கீதம் ஓரு அறிமுகம், நினைவுரை: இசையறிஞர் சங்கீத வித்துவான் அ.மு.வர்ணகுலசிங்கம் அவர்களைப் பற்றிய நீங்காத நினைவுகள் ஆகிய தலைப்புகளில் அமைந்த 28 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்பில் இந்நூலாசிரியரின் ‘தமிழில் இசைப்பாடல்
வகைகள்” என்ற ஆய்வுநூலுக்கு ஈழத்தில் கிடைத்த வாழ்த்தும் வரவேற்பும் என்ற தலைப்பில் அன்றைய நிகழ்வு பற்றிய சிறப்புக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. யாழ்.மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகின்றார். ‘தமிழில் இசைப்பாடல் வகைகள்” என்ற தலைப்பில் இந்திய இசைத்துறையில் தனது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டவர். இது 2017இல் நூல்வடிவம் பெற்றது. பேராசிரியர் நா.சுப்பிரமணியம் அவர்களின் துணைவியாரான இவர் தனித்தும், துணைவருடன் இணைந்தும்பல நூல்களை எழுதியுள்ளார். கனடாத் தமிழ்க் கல்லூரியின் நுண்கலைப் பீடத்தலைவராக செயற்பட்டுவருகின்றார்.

ஏனைய பதிவுகள்

12432 – யாழ்நாதம்: இதழ் 9-2003.

சிவகாமி அம்பலவாணர் (இதழாசிரியர்). கொழும்பு: பழைய மாணவிகள் சங்கம், யாழ். இந்து மகளிர் கல்லூரி- கொழும்புக் கிளை, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). 72 பக்கம்,

12399 சிந்தனை: தொகுதி II (புதிய தொடர்) இதழ் 1 (மார்ச் 1984).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1984. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை). (4), 141 பக்கம், விலை: ஆண்டுசந்தா ரூபா 75., அளவு:

12897 – திரைமறைவுக் கலைஞர்கள்: ஓர் அனுபவப் பகிர்வு.

எஸ்.நடராஜன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 68 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5 x

14625 நிலா நாழிகை.

வேலணையூர் ரஜிந்தன் (இயற்பெயர்: பாலசுந்தரம் ரஜிந்தன்). வேலணை: பாலசுந்தரம் ரஜிந்தன், 4ம் வட்டாரம், வேலணை கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). 110 பக்கம்,

14342 புன்னாலைக்கட்டுவன் கணேச சனசமூக நிலையம்: கட்டடத்திறப்பு விழா சிறப்பு மலர் 15.12.2002.

ம.துஷ்யந்தன் (மலர்த் தொகுப்பாசிரியர்). புன்னாலைக்கட்டுவன்: கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன் தெற்கு, 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). vi, (4), 50 பக்கம், விலை:

14640 பொற்கனவு.

வேலணையூர் ரஜிந்தன் (இயற்பெயர்: பாலசுந்தரம் ரஜிந்தன்). சுவிட்சர்லாந்து: I.T.R. ஊடக வலையமைப்பு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). 135 பக்கம், விலை: ரூபா 300.,