குமுதினி கனகரெத்தினம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, E.L1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 2வது பதிப்பு, 1997, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 14: கோல் குவிக் பிரின்டர்ஸ்).
(4), 111 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21 x 14 சமீ.
வட இலங்கை சங்கீத சபையினர் நடத்தும் சங்கீதப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக இந்த வினா-விடைத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இசைத்துறையை வளர்க்கும் நோக்கமாக இசைத்துறையில் ஆர்வம் கொண்ட திரு மு. சிவசிதம்பரம் (M.S.பரம்) அவர்களால் 08.08.1931 அன்று வட இலங்கைச் சங்கீத சபை ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது தலைவராக வடமாகாண கல்வி அதிகாரியான Dr. இயன் சன்டிமனும், உப தலைவராக கந்தரோடையை சேர்ந்த திரு.W.M.குமாரசாமியும், செயலாளராக ஏழாலையைச் சேர்ந்த திரு மூ.சிதம்பரம் அவர்களும் பொருளாளராக அண்ணாசாமிப் பிள்ளையும் பதவி வகித்தனர். இச் சபைக்கு அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் T.P. சபேசையரின் வழிகாட்டலில் முதலாவது பாடத்திட்டம் வரையப்பட்டது. அதன் அடிப்படையில் 1933 ஆம் ஆண்டு தொடக்கம் சங்கீத பாடத் தேர்வுகள் நடாத்தப்பட்டன. பாடத்திட்டத்தின் தேவைக்கேற்ற காலத்திற்கு காலம் மாற்றம் செய்யப்பட்டது. அவ்வாறு 1972, 1993, 2001, 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச் சபையினால் சங்கீதம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஹார்மோனியம், தவில், நாதஸ்வரம், நடனம், பண்ணிசை, நாடகம், மிருதங்கம் போன்ற பாடங்களை அகில இலங்கை ரீதியாக வருடந்தோரும் பத்தாயிரத்துக்கும் அதிகமான பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இச் சபையானது 1931 ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை யாழ் கல்வி திணைக்களத்தின் சிறிய பகுதியில் இயங்கிவந்தது. 2013 ஆம் ஆண்டு சுன்னாகம், மருதனார்மடத்தில் சொந்த கட்டடத்தில் காரியலயம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை நடைபெற்று வருகின்றது. (இந்நூல்கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38863).