12693 – தமிழில் இசைப்பாடல் வகைகள்: அறிவனாரின் பஞ்சமரபு நூலை மையப்படுத்திய-ஒரு நுண்ணாய்வு.

கௌசல்யா சுப்பிரமணியன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxiv , 224 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21 x 14.5 சமீ., ISBN: 978-955-659-545-1.

இவ்வாய்வானது தமிழில் இசைப்பாடல்களின் தோற்றம் பற்றியும் அப்பாடல்கள் காலங்காலமாகப் பல படிநிலைகளில் எய்திவந்த வளர்ச்சி பற்றியுமான ஒரு வரலாற்றுப் பார்வையாகும். தமிழின் இசைப்பாடல்கள் தொடர்பாக இதற்கு முன்னரும் பல ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை குறிப்பாக சிந்து, கீர்த்தனை மற்றும் பரிபாடல் முதலிய பாடல் வடிவங்கள் பற்றி மேற்கொள்ளப்பட்டவையாகும். இவ்வாய்வானது மேற்படி பா வடிவங்களையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமான தமிழ்ப் பாவடிவ வரலாற்றை இனம்காட்ட முற்பட்டுள்ளது. அவ்வகையில் இது ஒரு முழுநிலை வரலாற்றுப் பார்வையாக அமைந்துள்ளது. பாடல்வடிவம் தொடர்பான இந்த ஆய்விலே குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் தமிழில் இன்று எமக்கு நூல்வடிவில் கிடைக்கும் ஒரேயொரு பண்டைய இசையிலக்கண நூலானஅறிவனாரின் பஞ்சமரபு என்ற ஆக்கம் மையப்படுத்தி நோக்கப்பட்டமையாகும். இந்நூல் தமிழில் இசைப்பாடல் மரபும் இசையிலக்கண முயற்சிகளும், தமிழில் இசைப்பாடல் வகையின் தோற்றம் வளர்ச்சி மற்றும் வகைப்பாட்டு முறைமைகள், பஞ்சமரபின் பார்வையும் பகுப்புமுறையும், வண்ணமும் அதன் வளர்ச்சி நிலைகளும், கீர்த்தனையின் உருவாக்கமும் வளர்ச்சி நிலைகளும் ஆகிய ஐந்து பிரதான அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது

ஏனைய பதிவுகள்

14248 சமூகத்தை அணிதிரட்டல், வலுவூட்டல், சமூக நிலைமாற்றுதல் தொடர்பில் மாதிரிக் கட்டமைப்பையும் உபாயங்களையும் உருவாக்குதல்.

பிளன்டினா மகேந்திரன், சிரானி அனுசியா அன்ட்ரூ (ஆங்கில மூலம்), J.P.A. றஞ்சித்குமார். யாழ்ப்பாணம்: அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம், யாழ்ப்பாண மாவட்டம், 1வது பதிப்பு, மார்கழி 2012. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).

Goldenbet Spielbank, 500 Kasino Provision

Content Darf Ich Angrenzend Unserem Bet365 Willkommensbonus Ihr Treueprogramm Verwenden? Top Tipps Je Einen 500percent Einzahlungsbonus Cashback Bonus En Direct As part of Crownplay Kasino