12694 – 35 தாளங்களில் தனியாவர்த்தனம்.

நல்லை க.கண்ணதாஸ். யாழ்ப்பாணம்: ஏழிசை மிருதங்க நர்த்தனாலயம், 203, புங்கன்குளம் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டர்ஸ், நல்லூர்).

xvii, 273 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 19 x 26 சமீ., ISBN: 978-955-4079-00-7.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை மிருதங்க ஆசான் நல்லை க.கண்ணதாஸ் அவர்கள் எழுதிய நூல் இது. வட இலங்கை சங்கீத சபையினது 5ஆம் 6ஆம் தரங்களிலும்இ இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறை மாணவர்களினதும், மட்டக்களப்பு விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களினதும் பாடத் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் எழுதப்பட்டது. தாளம், 35 தாளங்கள் உருவாகும் விதம், கால அளவுகளைக் காட்டுகின்றகுறியீடுகளும் விளக்கமும், தனியாவர்த்தனத்தின் பகுதிகள், எல்லாத் தாளங்களுக்கும் வேகமாக பெரிய மோரா தயாரிக்கும் வழிகள், 35 தாளங்களில் தனியாவர்த்தனம் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல்கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்61893).

ஏனைய பதிவுகள்

12876 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 4 (1986/1987).

P.குணரத்தினம் (இதழ் ஆசிரியர்), இரா.சிவச்சந்திரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: நியூ ஈரா பப்ளிக்கேஷன்ஸ் லிமிட்டெட்). (12), 80 பக்கம், தகடுகள், விளக்கப்படங்கள்,

14490 ஆர்ட் லாப் (Art Lab) இதழ் 3-4.

ஜெகத் வீரசிங்க (பிரதம ஆசிரியர்), அனோலி பெரேரா (முகாமைத்துவ ஆசிரியர்), ஆனந்த திஸ்ஸகுமார, தா.சனாதனன், பாக்கியநாதன் அகிலன் (ஆசிரியர் குழு). கொழும்பு: தீர்த்த சர்வதேச கலைஞரகளின் கூட்டிணைப்பு, இணை வெளியீடு, ஹுவோஸ் நிறுவனம், 1வது