12700 – நாட்டிய நாடகத் தொகுப்பு (பரிசு பெற்ற நாடகங்கள்).

வைகுந்தம் கணேசபிள்ளை. யாழ்ப்பாணம்: இணுவில் திருநெறிய தமிழ்மறைக்கழகம், ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில், 1வது பதிப்பு, 2012.

xix, 124 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5 x 14.5 சமீ.

யாழ். இராமநாதன் மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையான கலாபூஷணம், பண்டிதை வைகுந்தம் கணேசபிள்ளை அவர்கள் இயற்றிய நாட்டியநாடகங்களின் தொகுப்பு இதுவாகும். இதில் அரிச்சந்திர மயான காண்டம், கண்ணகி, யார் யார்க்கும் குடியல்லர், கற்பு, சாந்தி சமாதானம், வந்ததே வசந்தம், பாஞ்சாலி சபதம், பரதன் பாதுகை பெறல், பஞ்ச பூதங்கள், கங்குலும் பகல்பட வந்தான், தமயந்தி இரண்டாம் சுயம்வரம், மயிர் நீப்பின் வாழா கவரிமான், சூரன்போர், கர்ணன், ஜடாயுவின் மோட்சம், சிவனது தவத்தால் அந்த இயமனையும் வெல்வேன் யானே ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 16 பரிசுபெற்ற நாட்டிய நாடகங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. இவை 1997-2010 காலகட்டங்களில் மேடையேற்றம்பெற்றுப் பரிசுபெற்றவை. இந்நூல் பண்டிதை வைகுந்தம் கணேசபிள்ளை அவர்கள் கலாபூஷணம் விருது பெற்றமையையொட்டிய நினைவேடாகவும் வெளியிட்டுள்ளமையால் இந்நூலின் ஆரம்பத்தில் வாழ்த்துரைகள் பலவும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்