பிரியா சதீஸ்குமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: நாடக மன்றம்,
சைவ மங்கையர் வித்தியாலயம், இல.23, உருத்திரா மாவத்தை, வெள்ளவத்தை,
1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 112 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 21 x 14.5 சமீ.
இது நாடகத் தமிழ் தொடர்பான பயன்மிகு கட்டுரைகளின் தொகுப்பு. சிகரத்தின் சிகரம், மன்றத்தின் சுவடுகள், நாடகக் கலையின் வரலாறு, மறைந்துபோன நாடகத் தமிழ் நூல்கள், ஈழத்துத் தமிழ் நாடகங்கள் வகைகளும் வளர்ச்சியும், கம்ப நாடகம், பின் காலனித்துவமும் ஈழத்தமிழர் அரங்கமும், தமிழில் நாடகத் தோற்றம், தமிழ் மொழித்தினப்போட்டிக் கூத்துகள் எதிர்நோக்கும் சவால்கள், சமூக ஒருங்கிணைப்புக் கலையாகவும் கற்கை நெறியாகவும் கூத்து, ஈழத்துத் தலைசிறந்த நாடக கலைஞர் நடிகமணி வி.வி.வைரமுத்து, அருணாசெல்லத்துரையின் நாடகங்களில் ஒரு பார்வை ஆகிய 12 தலைப்புகளில் இச்சிறப்புமலர் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதிப் பகுதியில் பாடசாலை மட்டப் போட்டிகளின்முடிவுகள், பதிந்த நிழல்கள் ஆகிய இரு ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.திருமதி பிரியா சதீஸ்குமார் சைவ மங்கையர் வித்தியாலய நாடக மன்றப் பொறுப்பாசிரியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது.சேர்க்கை இலக்கம் 54095).