12722 – மீலாதுன் நபி விசேட மலர் 1991.


கலைவாதி கலீல், M.M.M.மஹ்ரூப், F.M.பைரூஸ் (மீலாத் விழா மலர்க்குழு). கொழும்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்).


(110) பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5 x 21 சமீ.


புத்தளம் மாவட்டத்தில் நடந்தேறிய 1991ம் ஆண்டுக்குரிய தேசிய மீலாத் விழா முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ்வைபவத்தின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. இவ்விழாவையொட்டி ஒழுங்குசெய்திருந்த கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் தரம்வாய்ந்த படைப்புக்கள் இம்மலரில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14124).

ஏனைய பதிவுகள்

17546 கொரோனா.

சிவலோகதாசன் சதுர். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 74 பக்கம், விலை: ரூபா 350., அளவு: