உ.நிசார் (இயற்பெயர்: ர்.டு.ஆ. நிசார்). மாவனல்லை: H.L.M. நிசார், 1வது பதிப்பு, 2008. (மாவனல்லை: எம்.ஜே.எம்.பதிப்பகம், 119, பிரதான வீதி).
28 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21 x 15 சமீ., ISBN: 978-955-50064-3-9.
சிறுவர்களுக்குக் கற்பிக்கும் பணியில் பல வருட அனுபவம் கொண்டவர் உ. நிசார். சிறுவர்களின் உளப்பாங்கு, சிறப்பாற்றல்கள், சுவையுணர்வு, சொல்வளம், இசையார்வம் என்பவற்றை அனுபவரீதியாக உணர்ந்த இவரது நான்காவது சிறுவர் பாடல் தொகுப்பு இது. முன்னதாக இவர் நட்சத்திரப் பூக்கள் (2006), வெண்ணிலா (2007), மலரும் மொட்டுக்கள் (2007) ஆகிய சிறுவர் நூல்களை வெளியிட்டுள்ளார். சிறகு விரி- சிறுவர் பாடல் தொகுதியில் 18 பாடல்கள் உள்ளன. சிறுவர் பாடத்திட்டத்திற்கு ஏற்ப இயற்கை, இயற்கையை அவதானித்தல், இயற்கையின் எழில், இயற்கைக்கு மனிதன் செய்யும் தீங்குகள், இயற்கையைப் பாதுகாத்தல், குடும்பம், உறவுகள், நல்லுபதேசங்கள், என்பனவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இத்தொகுப்பு படைக்கப்பட்டுள்ளது. எனது அம்மா, கொக்கு, நல்லது செய்வோம், அழகுராஜா, நல்ல நல்ல உணவுகள், வண்ணம்மிகு மின்மினி, ஒலிகள், மழை, கல்வி கற்போம், குரங்காரே, பச்சைக் கிளி அக்கா, தம்பி உனக்குத்தான், சிறகு விரி, இவர் யார்?, கடலோரத்தில், குருவிக் குடும்பம், பொம்மைப் பாப்பா ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 217207 CC).