12725 – செந்தமிழ் பாப்பாப் பாடல்கள்.


பத்மா இளங்கோவன். யாழ்ப்பாணம்: நாவேந்தன் பதிப்பகம், மயூரன் இல்லம், இராமலிங்கம் வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஜுன் 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி).

(2), 47 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 370., அளவு: 20 x 14.5 சமீ.

நீண்டகாலமாக ஆசிரியராகப் பணியாற்றியமை, பாலர் கல்வியில் விசேட பயிற்சிபெற்றிருந்தமை என்பன பத்மா இளங்கோவன் சிறுவர்க்கான சிறந்த பாடல்களை ஆக்குவதற்குத் துணை நிற்கின்றன. சிறுவர் இலக்கியத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள ஆசிரியை ஏற்கெனவே செந்தமிழ் மழலைப் பாடல்கள், செந்தமிழ் சிறுவர் பாடல்கள் ஆகிய நூல்களை வழங்கியவர். இந்நுலில் 24 பாலர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இலகு நடையில் எளிமையான தமிழ்ச் சொற்களால் ஆன ஓசை நயத்துடன், எதுகை மோனைச் சிறப்புடன் இப்பாடல்கள் அமைந்துள்ளன. குழந்தைகளின் சிந்தனாசக்தியைத் தூண்டும் கருத்துக்களையும் அவர்களை நல்வழிப்படுத்தும் ஒழுக்கவியல் கருத்துக்களையும் இப்பாடல்களில் பொதிந்துவைத்துள்ளார். பாடலுக்குப் பொருத்தமான சித்திரங்கள் நூலை சிறுவர்களின்பால் ஈர்க்கத் துணைபுரிகின்றன. பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் பத்மா இளங்கோவன், ‘பரிசு” என்ற சிறுவர் சஞ்சிகையை பிரான்சிலிருந்து வெளியிட்டவர். தமிழ்நாடு கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையின்
சிறுவர் இலக்கியத்திற்கான விருதினை 2012இல் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Futuristic Casino More Help games

Café Local casino, for instance, now offers a generous 350% incentive up to $dos,five hundred to own professionals whom put playing with Bitcoin. Which large-well