12727 – கடவுளைக் கண்டவர்கள்.

.
த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1டB, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, E.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

56 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 75., அளவு: 20.5 x 15 சமீ., ISBN: 978-955-1162-31-3.


பக்தி வழியில் இறைவனையும் இறை உணர்வினையும் அடைந்த நாயன்மார்களின் கதைகளைச் சிறுவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் விபரிக்கின்றது இளையான்குடி மாறனார், காரைக்கால் அம்மையார், திருநாவுக்கரசர், திருக்குறிப்புத் தொண்டர், ஒளவையார், திருநாளைப் போவார், சண்டீசர், கச்சியப்பர், நமிநந்தி, போன்ற சிவபக்தர்களின் கதைகளை இச்சிறுவர் நூல் கதை வடிவில் தருகின்றது. அவை நள்ளிரவில் வந்த விருந்தினர், பேய் வடிவம் கேட்ட பெண், போகும் வழியில் பொதிசோறு பெற்றவர், கல்லிலே தோன்றிய கை, ஒளவை கண்டமுருகன், திருநாளைப் போவாரின் தில்லைத் தரிசனம், தந்தையையே தண்டித்த தனையன், கச்சியப்பரை மெச்சிய முருகன், சித்தராக வந்த சிவபெருமான், தண்ணீரால் விளக்கேற்றியவர் ஆகிய கவர்ச்சிகரமான 10 தலைப்புகளில் இவை சிறுவர் பக்திக் கதைகளாக விரிகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52269).

ஏனைய பதிவுகள்