எஸ்.ஜெபநேசன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 125 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978-955-659-525-3.
இந்நூல் ஆங்கில இலக்கிய வரலாற்றினை தமிழ் மாணவர்கள் விளங்கிக் கொள்ளும் வண்ணம் இங்கிலாந்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் காலப்பகுதிகளாக வகுத்து எழுதப்பட்டுள்ளது. சோசர் காலம் கி.பி.1400 வரை (Age of Chaucer), எலிசபெத் மகாராணியார் காலம் 1559-1603 (Elizabethan Age), தூய்மைவாதிகளின் காலம் 1603-1660 (Puritan Age), அகஸ்தன் காலம் 1660-1798 (Augustan Age), மனோரதியக் காலம் 1798-1850 (Romantic Age), விக்டோரியா மகாராணியார் காலம் 1850-1901 (Victorian Age), தற்காலம் 1901 முதல் (Contemporary Period). மேலும் ஒவ்வொரு காலத்தையும் ஆராய்கின்றபோது, பின்வரும் குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆட்சி புரிந்த மன்னர்கள், அக்காலத்தில் இடம்பெற்ற முக்கியமான சம்பவங்கள், அரசியல்நிலை, சமயமும் சமுதாயமும், இலக்கியப் பண்பு, கவிஞர்களும் நூல்களும், இப்படியாக ஆங்கில இலக்கிய வரலாற்றினை நோக்கும்போது இங்கிலாந்தின் அரசியல், பொருளியல், சமூகவியல் என்பன எவ்வாறு இலக்கியத்தைப் பாதித்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் கலாநிதி எஸ்.ஜெபநேசன், தென்னிந்தியதிருச்சபை யாழ். ஆதீனத்தின் ஓய்வுபெற்ற பேராயராவார்.