12777 – போதிமரக் குயில்: கவிதைத் தொகுப்பு.

அம்பிகை பஞ்சலிங்கம். யாழ்ப்பாணம்: செல்வி அம்பிகை பஞ்சலிங்கம், புனித செபஸ்தியார் வீதி, கோண்டாவில் கிழக்கு, 1வது பதிப்பு, மாசி 2018. (யாழ்ப்பாணம்: சாயி அச்சகம், காங்கேசன்துறை வீதி, கோண்டாவில், இணுவில்).

xii, 90 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 16 x 11.5 சமீ., ISBN: 978-955-38944-0-3.

‘அம்பிகையின் படைப்புகள் -நேர்மை என்ற இலக்கணப் பாதையில் இசைந்து நடப்பவை. சமூகத்திற்கான சமரசங்கள் அவற்றிடம் இல்லை. அந்த நேர்மையே அம்பிகையின் அத்திவாரம். இலக்கணத்தின் அனுபவத்தை, புரிதலை, ஏக்கத்தை, நம்பிக்கையை, எதிர்பார்ப்பை அவர் எப்படிப் புரிந்துகொள்கிறாரோ அப்படியே சொல்ல முயல்கிறார். தமிழ்க் கவிதை எதுகை மோனை என்ற முரட்டுத் தளை களைத் தாண்டி வெகு காலமாயிற்று. இவரது கவிதைகளும் கட்டற்றவை. பொருளாலும் உருவாலும் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து குமரியாகின்ற அனுபவத்தை இவரது கவிதைகளும் அப்படியே பிரதிபலிக்கின்றன- சொல் நேர்த்தியிலும் கட்டமைப்பிலும்.’ (ச.மணிமாறன், புனைந்துரையில்).

ஏனைய பதிவுகள்

14898 நினைவலைகளில் வானொலிக் குயில்: ஒலிபரப்பாளர்களின் மனப்பதிவுகள்.

புஷ்பராணி சிவலிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 5: புஷ்பராணி சிவலிங்கம், 35/1, எட்மன்டன் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, மார்ச் 2013. (கொழும்பு 6: R.S.T. என்டர்பிரைசஸ், 14, W.A. சில்வா மாவத்தை). 164 பக்கம்,

14594 கட்டிடக் காடும் யுரேனியக் கதிரும்.

வேலணையூர் ரஜிந்தன் (இயற்பெயர்: பாலசுந்தரம் ரஜிந்தன்). வேலணை: பாலசுந்தரம் ரஜிந்தன், 4ம் வட்டாரம், வேலணை கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). ஒiஎ, 82 பக்கம், விலை: ரூபா