விவேகானந்தனூர் சதீஸ் (இயற்பெயர்: செல்லையா சதீஸ்குமார்). கிளிநொச்சி: படைப்பாளிகள் உலகம், காவியாலயா, இல. 177, விவேகானந்த நகர் கிழக்கு, 2வது பதிப்பு, சித்திரை 2017, 1வது பதிப்பு, கார்த்திகை 2016. (யாழ்ப்பாணம்: தேவி அச்சகம்).
xvii, 71 பக்கம், தகடுகள், விலை: ரூபா 250., அளவு: 18 x 12.5 சமீ., ISBN: 978-955- 54448-1-1.
போர் முடிவடைந்த ஏழு வருடங்கள் சென்றபின்பும் போரின் நீட்சியாக கொழும்பு புதிய மகஸீன் சிறைச்சாலையில் சிறைவாழ்க்கை வாழ்ந்துவரும் ஒரு கவிஞனின் கவித்தூறல்களின் தொகுப்பு இது. மனித வாழ்வின் சுதந்திர நடமாட்டங்கள் மறுக்கப்பட்டு சிறையில் வாழும் ஒருவனின் சிந்தனைகள் பல கோணங்களில் பன்முகத் தன்மையுடன் இந்த நூலில் 74 கவிதைகளாக வெளிவந்துள்ளன. தான் வாழ்ந்த கரைச்சி பிரதேசத்தின் எழிலை இறை பக்தியுடன் பதிவுசெய்கிறார். சிறையின் கடினத்தன்மையை அந்த நாள், அவலத்தின் பறை ஆகிய கவிதைகள் உரைக்கின்றன. தெரியாது, முரளி, நிலைக்கவில்லை ஆகிய கவிதைகள் சிறைச் சாலையின் சோகத்தை பதிவுசெய்கின்றன. இவரது கவிதைகளில் உளவியல் ரீதியாகவும் பௌதிகரீதியாகவும் அரசியல் கைதிகளின் பாதிப்புக்கள் வெளிப் பட்டுள்ளன.
மேலும் பார்க்க: 12125,12866.