12791 – காத்தவராயன்: சிந்து நடை நாடகம்.

சண்முகநாதன் கஜேந்திரன். கனடா: சண்முகநாதன் கஜேந்திரன், கலாலயா வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முத்திரைச் சந்தி, நல்லூர்).

xxix, 240 பக்கம், தகடுகள், விலை: ரூபா 500., அளவு: 21.5 x 15 சமீ. , ISBN: 978- 955-38635-0-8.

ஏற்கெனவே உரைகல்(2015), என்ற ஆய்வு நூலையும் வந்தவழி (2016) என்ற கவிதை நூலையும் எழுதியவர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் உயர்நிலைக் கல்விபெற்ற ஆசிரியரான சண்.கஜேந்திரன். புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் இவர் தாயகத்தில் சிறுவிளான் கிராமத்தில் பெறப்பட்ட மூலப்பிரதியை அடிப்படையாகக் கொண்டு, நவீன சமூக நோக்கின் அடிப்படையில் சிற்சில மாற்றங்களுடன் காத்தவரான் கதையை சிந்துநடை நாடகமாக வழங்கியிருக்கிறார். புராண இதிகாசக் கதைகளில நாடக உலகில் புகழ்பெற்ற இருபாலை பொன்னப்பா அண்ணாவியார் மரபில் மயிலிட்டியில் வளர்ந்த காத்தவராயன் சிந்துநடைக் கூத்தில் நூலாசிரியரின் பேரனாரான பிள்ளையார் ஆச்சாரியார், 1956களில் பிற்காத்தவராயனாக நடித்துப் புகழ்பெற்றவர். தொடர்ந்து சிறுவிளான் சிந்துநடைக் கூத்தில் கஜேந்திரன் அவர்கள் பாலகாத்தானாக (1991) அரங்கேறி பாராட்டுக்கும் பாத்திரமாகி கலையுலகில் இன்றும் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்