12792 – தமிழழகி: ஐந்தாவது வீரமாமுனிவர் காண்டம்.

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2008. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ).

(24), 1497-1880 பக்கம், விலை: கனேடிய டொலர் 25., அளவு: 21.5 x 14 சமீ.

ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் க. தா. செல்வராசகோபால் (13 டிசம்பர், 1928 – 21 டிசம்பர் 2010) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர். பன்னிரண்டாயிரம் பாடல்கள், 2070 பக்கங்கள், ஒன்பது காண்டங்கள் கொண்ட காவியம் படைக்கவேண்டும், அது 81 படலங்களாகவும், 567 அங்கங்களாகவும் விளங்கவேண்டும் என்ற திட்டமிடலுடன் உருவான தமிழழகி காப்பியத்தின் ஐந்தாம் காண்டம் இந்த நூலாகும். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46173).

ஏனைய பதிவுகள்

13214 கந்தபுராணம்.

ஆறுமுக நாவலர் (பதிப்பாசிரியர்). சிதம்பரம்: பொன்னம்பலபிள்ளை, தருமபரிபாலகர், சைவப்பிரகாச வித்தியாசாலை, 5வது பதிப்பு வைகாசி 1912. (சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை). 440 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×15.5 சமீ. சுப்பிரமணிய சுவாமி வரப்பிரசாதியாயும்