12808 – பரசுராம பூமி.

வி.மைக்கல் கொலின். மட்டக்களப்பு: மகுடம் வெளியீடு, இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மே 2018. (மட்டக்களப்பு: வணசிங்கா பிரின்டர்ஸ், திருக்கோணமலை வீதி).

xvi, 111 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978-955-4041-08-0.

முழுக்க முழுக்க தொன்மங்களையும் மறை நூல்களையும் மறுவாசிப்புக்குட்படுத்தும் ஈழத்தின் சிறுகதைத் தொகுப்பொன்று இதுவாகும். இதில் வரம், குருஷேத்திரபுரம், புதிய ஏற்பாட்டின் எழுதப்படாத பக்கங்கள், இராவணாபுரி, யாருமிங்கே தீர்ப்பிடலாம், பரசுராம பூமி, ஓர்மம், ஞானம், எல்லாம் நிறைவேறிற்று ஆகிய ஒன்பது கதைகளை இடம்பெறச் செய்துள்ளார். இவற்றுள் வரம், இராவணாபுரி, ஓர்மம் என்பன இராமாயணத் தொன்மம் சார்ந்தவை. குருஷேத்திரபுரம், பரசுராமபூமி ஆகியவை மகாபாரதத் தொன்மம் சார்ந்தவை. ஞானம் ஜாதகக் கதைகளின் தொன்மம் சார்ந்தது. புதிய ஏற்பாட்டின் எழுதப்படாத பக்கங்கள், யாருமிங்கே தீர்ப்பிடலாம், எல்லாம் நிறைவேறிற்று என்னும் கதைகள் விவிலியத் தொன்மம் சார்ந்தவை. ஆசிரியர் இக்கதைகளை முன்னதாகப் பத்திரிகைகளில் வாசித்த வாசகர்களின் மனப்பதிவுகளை பார்வைகள்-பதிவுகள் என்றவாறாக நூலின் இறுதியில் வழங்கியிருக்கிறார். ச.மணிசேகரன், கந்தையா தவராஜா, வாசுகி குணரத்தினம் ஆகியோரின் மனப்பதிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. நூலின் ஆரம்பத்தில் கவிஞர் அ.ச.பாய்வா, பேராசிரியர் சி.மௌனகுரு, பேராசிரியர் செ.யோகராசா, ஜிப்ரி ஹாஸன், ஆகியோரின் கருத்துரைகள் இடம்பெற்றுள்ளன. திருக்கோணமலையைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட மைக்கல் கொலின் இரு மாவட்டங்களிலும் நன்கு அறியப்பட்ட கலை இலக்கியவாதியாவார். தாகம், மகுடம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியரான இவர் கவிஞர், எழுத்தாளர், குறும்பட இயக்குநர், பத்திரிகையாளர், வெளியீட்டாளர் எனப் பல்பரிமாணங்களில் இயங்குபவர்.

ஏனைய பதிவுகள்

The fresh No-deposit Bonuses 2024

Posts 10 No-deposit Bonus in the ComeOn Gambling enterprise Souls of your own Deceased Position – 65 Free Revolves! FortunePlay three hundred 100 percent free