வை.கஜேந்திரன். மன்னார்: தமிழமுது நண்பர்கள் வட்டம், 10/38, முதலாம் ஒழுங்கை, எமில் நகர், 1வது பதிப்பு, மார்கழி 2016. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xvi, 112 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22 x 15 சமீ., ISBN: 978-955-41112-1-9.
இந்நூலில் வை.கஜேந்திரனின் ஒளி பிறந்தது, தங்கம், மறுபிறப்பு, சுயமாக, இது தான் வாழ்வு, நிலா, கல், நீ நீயாக, இரவு தான், தலையெழுத்து, குடிகுடியை, உணர்கின்றேன், சுமைதான் வாழ்க்கை, கனவு, மனமாற்றம், முதற்தடவையல்ல, ஒரு முத்தம், நிஜமில்லையே, கறுப்பு மலர், மரம், பசி, ஒரு குழந்தை, வெளியில் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 23 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு முத்தம், நிஜமில்லையே, கறுப்பு மலர்கள் ஆகிய மூன்று கதைகளும் காதலின் உண்மைத் தன்மையையும், போலிக் காதலையும் இனம்காட்டுகின்றன. உள்ளக இடப்பெயர்வின் சின்னமாகிவிட்ட கம்பிவேலி முகாம் வாழ்க்கையின் அவதியையும், மீள்குடியேற்ற வீடமைப்பிற்காக மரங்கள் வகைதொகையின்றி வெட்டப்படுவதால் வனவலங்குகளும், பறவைகளும் சந்திக்கும் நெருக்கடிகளை மரம் என்ற கதை உணர்த்திச் செல்கின்றது. பொறுப்பற்ற குடும்பத் தலைவனால் சிதையும் குடும்பக் கட்டுக்கோப்பினை பசி என்ற கதை கூறுகின்றது. வைத்தியம் என்ற பெயரிலும் சாமியார்களின் மந்திர தந்திர ஏமாற்றுக்களாலும் அலையும் குழந்தைகளின் கதையை ஒரு குழந்தை என்ற கதை கூறுகின்றது. வெளியில் என்ற கதை சிறைக்கு உள்ளே இருப்பவர்கள் எல்லாம் குற்றவாளிகளும் இல்லை, வெளியே இருப்போர் எல்லோரும் சுற்றவாளிகளும் இல்லை என்பதை வலியுறுத்து கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62112).