12814 – மெல்லச் சாகும் வாலிபம் (சிறுகதைகள்).

நற்பிட்டிமுனை பளீல் (இயற்பெயர்: ஆதம்லெப்பை முஹம்மது பளீல்). கல்முனை: A.L.M. பளீல், நற்பிட்டிமுனை-1, 1வது பதிப்பு, 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).

60 பக்கம், விலை: ரூபா 55., அளவு: 20 x 14 சமீ.

இதயத்தை அறுக்கும் இடைவெளி (சிந்தாமணி 1986), மறக்கத் தெரியாத மனசு (1989), மறுபடியும் மறுபடியும் (முனைப்பு 1989), எது எது எப்படியோ அது அது அப்படித்தான் (மல்லிகை 1989), அவர்களுக்கும் இதயம் ஒன்றுதான் (வீரகேசரி 1989), ஜெயவேவா (சரிநிகர் 1994), 16 மாடிகளும் 17 வருடங்களும் (சரிநிகர் 1995) ஆகிய எட்டுச் சிறுகதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு இது. சமூக அவலங்களையும் மூடநம்பிக்கைகளையும் கருப்பொருளாக்கி எழுதும் சிறுகதைப் படைப்பாளி இவர். கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டதாரியான பளீல் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராக 1986இல் அரச சேவையில் இணைந்து சிலகாலம் பணியாற்றியவர். பின்னாளில் 1.4.1991 முதல் கல்முனை பிரதேச செயலாளராகவும் 1.1.2003 முதல் காத்தான்குடி பிரதேச செயலாளராகவும் பணியாற்றிய இப்படைப்பாளி 1.1.1965 இல் பிறந்தவர். 4.12.2005 அன்று அவர் தனது 40ஆவது அகவையில் துப்பாக்கிதாரிகளால் கொலைசெய்யப்பட்டார். தன் மறைவுவரை, இவர் 30க்கும் அதிகமான கதைகளையும் 65 கவிதைகளையும் எழுதியுள்ளர். தனது முதலாவது நூலாக ‘மடிக்குள் விழுந்த வெள்ளிகள்’ என்ற புதுக்கவிதை நூலை 1988இல் வெளியிட்டார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17146).

ஏனைய பதிவுகள்