12840 – திருக்குறள் (பொழிப்புரை).

சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்), வரதர் (இயற்பெயர்: தி.ச.வரதராசன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மாசி 2001. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A.தம்பி லேன்).

viii, 291 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 18 x 12.5 சமீ.

தமிழறிஞர்களான சொக்கனும் வரதரும் இணைந்து திருக்குறளுக்குச் செய்த பொழிப்புரையின் நூலுரு இதுவாகும். முதல் 700 குறட்பாக்களுக்கும் சொக்கன் அவர்களும், 701 முதல் 1330 குறட்பாக்களுக்கு வரதர் அவர்களும் பொழிப்புரை வழங்கியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33607).

ஏனைய பதிவுகள்