12847 – புனைவுகள், நினைவுகள், நிஜங்கள்: ஒரு ஆய்வுநிலைத் தொகுப்பு.

செல்வி திருச்சந்திரன். கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 134 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978-955-9261-62-9.

செல்வி, திருச்சந்திரன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த பெண்ணிய ஆய்வாளர், எழுத்தாளர். கொழும்பில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனராகப் பணியாற்றுகிறார். இவர் பெண்நிலை, வர்க்கம், பண்பாடு, பால் நிலை போன்ற பல விடயங்களை ஆய்வு செய்து எழுதி நூலாக் கியுள்ளார். ‘நிவேதினி’ என்ற பெண்நிலைவாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருக்கிறார். இவரது தந்தை ஹன்டி பேரின்பநாயகம். இவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் சமூக ஆய்வு நிறுவனத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் அம்ஸ்ரடாமில் உள்ள ஏசபைந பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றிருக்கின்றார். இவர் கிழக்குப் பல்கைக்கழகத்தில் அதிதி விரிவுரையாளராகப் பணியாற்றுவதுடன் பெண்ணியம் சார்ந்த அமைப்புகளில் முக்கிய உறுப்பினராக இருந்து ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இவர் தமிழில் எழுதிய 10 ஆய்வுக்கட்டுரைகள் இரண்டு பிரிவுகளில் இங்கு இடம்பெற்றுள்ளன. ‘வரலாறும் இலக்கியமும்’ என்ற முதற் பிரிவில் இலக்கியத்தின் மையப்பொருளும் மறைபொருளும்: சமூகம்சார் பண்பாட்டில் அவற்றின் அர்த்தப்பாடல், பெண்களின் வாய்மொழி இலக்கியம்: தாலாட்டு ஒப்பாரி பற்றிய ஒரு சமூகவியல் நோக்கு, அஞ்சுகத்தின் சயசரிதை, வரலாற்றைப் புரட்டிப் பார்த்து ஆறுமுக நாவலர் பற்றி ஒரு மீள் பரிசீலனை, அக்டோபர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவம் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சமூகம்-பண்பாடு-கோட்பாடுகள் என்ற இரண்டாவது பகுதியில் சமூகவியல் கோட்பாடுகளும் அவை பற்றிய சில வாதங்களும், பெரும்போக்கு வாதங்களின் போதாமைகளும் ஒரு சாராரின் மறுப்புகளும், சொல் என்று ஒரு சொல், பண்பாட்டிற்கு மறுபக்கங்களும் உண்டு, நூல்விமர்சனம்: பஞ்சமரும் சமூகத் தொடர்புகளும் ஆகிய தலைப்பிலான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்