12861 – ஒரு சில விதி செய்வோம்: கவிதைச் சிந்தனைகள்.

இ.முருகையன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).

(6), 80 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 20.5 x 13.5 சமீ.

நெடியதொரு பழைய மரபினை உடையது தமிழ்க் கவிதை. இந்த மரபின் சுமை யுடன் நவீனத்துவத்தை எவ்வாறு எதிர்நோக்குவது என்பது, தமிழ்க் கவிஞர்களின் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்துவந்துள்ளது. மரபின் தொடர்பிலே நவீனத்துவம் பிறப்பிக்கும் பிரச்சினைகளையே இந்நூல் பரிசீலனைசெய்கின்றது. இதனால் பழமைப் பீடிப்பின் தேக்கமும் சூனியவாத எதிர்மறை நோக்கின் போலிப் புதுமையினது வியர்த்தமும் இங்கு எடுத்துப் பேசப்படுகின்றன. குருட்டுப் பழமையிலும் மேலோட்டமான புதுமையிலும் உள்ள நோய்க்குணங்களை அடையாளம் காட்டும் முயற்சியே இந்நூலாகும். இன்று, எளிமையா கடுமையா, ஒதுக்கல் முறை, பாடவா பேசவா?, குளியலறை முணுமுணுப்பு, இனி, ஆகிய தலைப்புகளில் கவிஞர் முருகையன் எழுதியுள்ள இக்கட்டுரைகள் முன்னதாக எழுத்து, தாமரை, வீரகேசரி முதலான ஊடகங்களில் பிரசுரமாகியிருந்தன. 2007இல் சாஹித்திய இரத்தினா விருது பெற்ற கவிஞர் இராமுப்பிள்ளை முருகையன் சாவகச்சேரி, கல்வயல் கிராமத்தில் 23.4.1935இல் பிறந்தவர். தன் 12ஆவது வயதில் கவிதை புனையத் தொடங்கியவர். 1950 முதல் கவிதை எழுதிவரும் இவர் பல பிறமொழிக் கவிதைகளையும் தமிழுக்குத் தந்துள்ளார். ‘நோக்கு’ என்ற காலாண்டுக் கவிதை இதழின் (1964-1965) இணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதிப் பட்டமும் இவருக்குக் கிடைத்திருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19415).

ஏனைய பதிவுகள்