12862 – திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை.

தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னா. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

(14), 248 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21.5 x 14 சமீ., ISBN: 978-955-30-4157-9.

இந்நூலில் 40 விமர்சனக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவை கவிதை நூல்கள், சிறுகதை நூல்கள், நாவல்கள், சிறுவர் இலக்கியம், ஏனையவை என ஐந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. நூலில் ஆசிரியை ரிஸ்னா, தான் வாசித்த நூல்களில் காணப்படும் விடயங்களை விமர்சனரீதியில் ஆழமாகவும் நேர்த்தி யாகவும் எளிமையான தமிழ்நடையில் எழுதியுள்ளார். சமகாலத்தில் வெளியான நூல்களின் இரசனைக் குறிப்புத் திரட்டாக இந்நூல் அமைகின்றது. ஆழமான இலக்கியத்தேடலற்ற வாசகனுக்கும் குறித்த ஆசிரியர் பற்றியதும் அவரது படைப்புகள் பற்றியதுமான தகவலை வழங்கி, அவரை அவ்வாசிரியரின் நூலைத் தேடிச்செல்லவேண்டும் என்ற அவாவை வரவழைப்பதாக இக்கட்டுரைகள் அமைகின்றன. புறக்கணிக்கப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாத புதிய எழுத்தாளனையும் இவரது கட்டுரைகள் பரந்த வாசகர் குழாமை நாடிக் கொண்டு சேர்க்கும் தொடர்புப்பாலப் பணியை மேற்கொள்கின்றன.

ஏனைய பதிவுகள்