12863 – படைப்புகளும் பார்வைகளும்: கலை இலக்கியப் படைப்புகள் மீதான பார்வைகள்.

க.நவம். வல்வெட்டித்துறை: நான்காவது பரிமாணம், தெணியகம், பொலிகண்டி, 1வது பதிப்பு, 2017. (நெல்லியடி: பரணீ அச்சகம்).

124 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5 x 12.5 சமீ., ISBN: 978-955-7295-02-2. 894.8(64)

சமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் 484 நூல் தேட்டம் – தொகுதி 13 இந்நூலில் சண்முகம் சிவலிங்கத்தின்-காண்டாவனம், செங்கை ஆழியானின்- விடியலைத்தேடி, மயூ மனோவின் – நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை, இளங்கோவின்- சாம்பல் வானத்தில் மறையும் வைரவர், தேவகாந்தனின்- கூர் 2010 சஞ்சிகை, டாக்டர் என்.எஸ்.நடேசனின் -வாழும் சுவடுகள், தேவமுகுந்தனின் -கண்ணீரினூடே தெரியும் வீதி, தீபச்செல்வனின் – பதுங்குகுழியில் பிறந்த குழந்தை, மெலிஞ்சிமுத்தனின்- வேருலகு, கருணாகரமூர்த்தியின் -பதுங்குகுழி, சேரனின் – றூயவ கை வாந சுயin குயடடள, தெணியானின் – இன்னொரு புதிய கோணம் ஆகிய பன்னிரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் நவம் அவர்கள் ஒரு தேர்ந்த வாசகனாகவும், நயப்புரையாளனாகவும், விபரிப்பாளனாகவும், விமரிசகனாகவும், பல்வேறு தளங்களிலும் இருந்து தாம் சுவைத்த நூல்களைப்பற்றி மேற்கொண்ட பதிவுகள் இவை. தான் கண்ட வாசிப்பின் இன்பத்தை அடுத்தவரும் அடையத்தூண்டுவதாக அவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்