மா.பாலசிங்கம். கல்கிஸ்ஸை: புதிய பண்பாட்டுத் தள வெளியீடு, 13, மவுண்ட் அவெனியு, மவுன்ட் லவீனியா, 1வது பதிப்பு, சித்திரை 2016. (கொழும்பு 6: ஆர்.எஸ்.ரி. என்டர்பிரைசஸ், 114, று.யு.சில்வா மாவத்தை).
xxvi, 488 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 22 x 15 சமீ., ISBN: 978-955-41109-2-2.
தினக்குரல் பதிவுகளாக வெளிவந்த இலக்கியக் கூட்டங்களில் ஆற்றிய மா. பாலசிங்கத்தின் உரைகளின் தொகுப்பு, கொம்யூனிஸ்ட் கார்த்திகேயன், பேராசிரியர் கைலாசபதி ஆகியோரின் நினைவுப் பேருரைகள், பேராசிரியர் கா.சிவத்தம்பி பவளவிழா மலர், சுபைர் இளங்கீரனின் இனிய நினைவுப் பகிர்வு, உழைக்கும் மக்கள் வாழ்வை இலக்கியமாக்கியவர் செ.யோகநாதன், கவிநாயகர் கந்தவனத் துடனான இலக்கியச் சந்திப்பு, வி.ரி.வி.தெய்வநாயகம்பிள்ளை ஒரு திறந்த புத்தகம், சங்கீதபூஷணம் அமரர் திலகநாயகம் போல் அஞ்சலியுரை, மல்லிகை டொமினிக் ஜீவாவின் பிறந்தநாள் விழா, மூத்த பத்திரிகையாளர் ஈ.வீ.டேவிட் ராஜுவின் பவளவிழா, தகவம் பரிசளிப்பு-2009, தம்பிஐயா தேவதாசின் இரு நூல்களின் வெளியீடு, மட்டுவில் ஞானகுமாரனின் கவிதைத் தொகுதி வெளியீடு எனப் பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திக் கட்டுரைகளும், அந்தரத்து உலவுகிற சேதி, மஹாகவியியல், ஞானம் எஸ்பொ. சிறப்பிதழ், தமிழ்நேசனின் நெருடல்கள், திருக்குறளின் கல்விச் சிந்தனை-சமூகநோக்கில் ஒரு மறுவாசிப்பு, கலை இலக்கியக் கட்டுரைகள், அவர்கள் துணிந்துவிட்டார்கள், லெனின் மதிவானம் எழுதிய உலகமயம்-பண்பாடு-எதிர்ப்பு அரசியல், இதயராசனின் முரண்பாடுகள்,சுதாராஜின் உயிர்க் கசிவு, ஐங்கரநேசனின் ஏழாவது ஊழி,; நீர்வை பொன்னையனின் காலவெள்ளம், நீலாவணன் காவியங்கள், ஊருக்கு நல்லது சொல்வேன், கசந்தகோப்பி உள்ளிட்ட பல்வேறு நூல்களின் வெளியீடு பற்றிய அறிமுக, விமர்சனக் கட்டுரைளையும் உள்ளிட்டதான 70 படைப்பாக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60577).