12867 – இலங்கையினதும் உலகத்தினதும் மூலாதாரச் சரித்திர நூல்.

L.H.ஹொஹஸ் பெறேறா, ஆ.இரத்தினசபாபதி (ஆங்கில மூலம்), B.M.யோசவ் பொன்ராசா, M.J.வேதநாயகம் (தமிழாக்கம்). கொழும்பு: W.M.A.வாஹிட் அன் பிரதர்ஸ், 233, பெரிய தெரு, 1வது பதிப்பு, 1955. (கொழும்பு: கூட்டுறவு மொத்த விற்பனவு அச்சக நிலையம், 160, மெக்கலம் ரோட்).

(18), 398 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.

கொழும்பு சென்ற் பெனடிக்ஸ் கல்லூரியில் சரித்திரபாட விரிவுரையாளரான டு.ர். ஹொஹஸ் பெறேறா, மற்றும் கொழும்பு சென்ற் பீற்றேஸ் கல்லூரியில் சரித்திரபாட விரிவுரையாளராகிய ஆ.இரத்தினசபாபதி ஆகியோரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலின் தமிழாக்கம். ஆதிகாலம் தொடக்கம் கி.பி. 1505 வரையுமான காலகட்ட இலங்கை வரலாற்றையும் உலக வரலாற்றையும் கனிஷ்டி வகுப்பு மாணவர்களுக்கு ஏற்றவாறு விளக்குகின்றது. ஆதிகாலம், இலங்கை-சரித்திர காலத்திற்கு முன் இருந்த விதம், நாகரிகத்தின் தொடக்கம், புகழ்மிக்க புராதன கிறீஸ், பண்டைய உரோமை, பௌத்தம்-அதன் தோற்றமும் வளர்ச்சியும், இலங்கையின் பூர்வநாகரிகம், மத்திய காலத்தில் மேற்கு நாடுகளின் நிலை, இலங்கை அனுராதபுரக் காலம்-1, மகாயானக் கொள்கை, இந்துமதம் மறுமலர்ச்சி பெற்றுப் பரம்புதல், அனுராதபுரக் காலம்-2, பிற்காலத் தென் இந்தியப் பேரரசுகள், இலங்கை-பொலநறுவைக் காலம் 1, இலங்கை-பொலநறுவைக் காலம் 2, மத்திய காலத்தில் கிழக்கு நாடுகள், ஐரோப்பா விழிப்படைதல், இலங்கை-தென்மேற்குத் திசையாக இடம்பெயருதல் ஆகிய 17 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34111).

ஏனைய பதிவுகள்

12102 – சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் திருப்பாற்கடல்: 24ஆவது ஆண்டு மண்டலபூஜை சிறப்பு மலர்.

கே.மோகன்குமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், இல. 11, ஆட்டுப்பட்டி ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (கொழும்பு: மாஸ்க் அட்வர்டைசிங் அன்ட்

14330 சுதந்திரத்தை நோக்கிய அரசியல் திட்ட வளர்ச்சி.

வேலு உதயசேகர். சாமிமலை: வே.உதயசேகர், அறிவகம், 7/1, கோவில் லேன், ஓல்டன் மே.பி., 1வது பதிப்பு, மே 2016. (மஸ்கெலியா: விக்டோரியா அச்சகம்). (8), 111 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 21×14.5

14760 காலங்கள் மாறும்.

கே.எஸ்.ஆனந்தன். (இயற்பெயர்: கார்த்திகேசு சச்சிதானந்தம்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2002. (சென்னை 4: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). ii,