12867 – இலங்கையினதும் உலகத்தினதும் மூலாதாரச் சரித்திர நூல்.

L.H.ஹொஹஸ் பெறேறா, ஆ.இரத்தினசபாபதி (ஆங்கில மூலம்), B.M.யோசவ் பொன்ராசா, M.J.வேதநாயகம் (தமிழாக்கம்). கொழும்பு: W.M.A.வாஹிட் அன் பிரதர்ஸ், 233, பெரிய தெரு, 1வது பதிப்பு, 1955. (கொழும்பு: கூட்டுறவு மொத்த விற்பனவு அச்சக நிலையம், 160, மெக்கலம் ரோட்).

(18), 398 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.

கொழும்பு சென்ற் பெனடிக்ஸ் கல்லூரியில் சரித்திரபாட விரிவுரையாளரான டு.ர். ஹொஹஸ் பெறேறா, மற்றும் கொழும்பு சென்ற் பீற்றேஸ் கல்லூரியில் சரித்திரபாட விரிவுரையாளராகிய ஆ.இரத்தினசபாபதி ஆகியோரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலின் தமிழாக்கம். ஆதிகாலம் தொடக்கம் கி.பி. 1505 வரையுமான காலகட்ட இலங்கை வரலாற்றையும் உலக வரலாற்றையும் கனிஷ்டி வகுப்பு மாணவர்களுக்கு ஏற்றவாறு விளக்குகின்றது. ஆதிகாலம், இலங்கை-சரித்திர காலத்திற்கு முன் இருந்த விதம், நாகரிகத்தின் தொடக்கம், புகழ்மிக்க புராதன கிறீஸ், பண்டைய உரோமை, பௌத்தம்-அதன் தோற்றமும் வளர்ச்சியும், இலங்கையின் பூர்வநாகரிகம், மத்திய காலத்தில் மேற்கு நாடுகளின் நிலை, இலங்கை அனுராதபுரக் காலம்-1, மகாயானக் கொள்கை, இந்துமதம் மறுமலர்ச்சி பெற்றுப் பரம்புதல், அனுராதபுரக் காலம்-2, பிற்காலத் தென் இந்தியப் பேரரசுகள், இலங்கை-பொலநறுவைக் காலம் 1, இலங்கை-பொலநறுவைக் காலம் 2, மத்திய காலத்தில் கிழக்கு நாடுகள், ஐரோப்பா விழிப்படைதல், இலங்கை-தென்மேற்குத் திசையாக இடம்பெயருதல் ஆகிய 17 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34111).

ஏனைய பதிவுகள்

12234 – புதிய அரசியலமைப்பில் மனித உரிமைகள்.

மனித உரிமைகள் அமைப்பு. வெளியீட்டுத் தகவல் தரப்படவில்லை. (கொழும்பு 10: Associated Newspapers of Ceylon Ltd, 35, D.R. Wijewardena Mawathe). 42 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5

12752 – இலக்கிய விழா 1988-1989: சிறப்பு மலர்.

திருமலை நவம், அருள் சுப்பிரமணியம்,பால சுகுமார் (மலர்க் குழுவினர்). திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, நவம்பர் (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). (4), 32 பக்கம்,

Spend Via Cellular phone Local casino

Blogs Go out Borrowing Studio: Video game Availableness Inside Mobile Online casinos Spend By Cellular telephone Local casino Gambling enterprise Lab All the details you

12150 – திருவாசக ஆராய்ச்சியுரை: முதலாம் பாகம்.

சு.அருளம்பலவனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: அ.சிவானந்தநாதன், காரைநகர், 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). (16), 480, ix பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13 சமீ. மணிவாசகர் அருளிச் செய்த