அமரதாச லியனகமகே, சிறிமல் ரணவல, P.ஏ.து.ஜயசேகர, நந்தா ஜயசிங்க (மூல நூலாசிரியர்கள்), இ.முருகையன், வே.வல்லிபுரம், ஐ. தம்பிமுத்து, த.ர.இராசலிங்கம் (மொழிபெயர்ப்பாளர்கள்), வே.பேரம்பலம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: எயிற்கின் ஸ்பென்ஸ் கம்பெனி லிமிட்டெற்).
vi, 93 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 14 சமீ.
இது தேசிய உயர் கல்விச் சான்றிதழ் பரீட்சைக்குரிய பாடநூல். பதினொராம் நூற்றாண்டின் இறுதிவரை இலங்கை வரலாற்றுச் சுருக்கம், நீர்வள நாகரிகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், பின் மத்திய காலத்து ஆட்சிமுறை, சமய-பண்பாட்டு மாற்றங்கள், இலங்கைக்கு வெளியுலகுடன் இருந்த வியாபாரத் தொடர்புகளும் 901.(1) வரலாற்றுப் பாடநூல்கள் 488 நூல் தேட்டம் – தொகுதி 13 பண்பாட்டுத் தொடர்புகளும், குடியேற்றப் பருவம், மத்திய வகுப்பின் எழுச்சி ஆகிய ஏழு அத்தியாயங்களைக் கொண்டதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30725).
மேலும் பார்க்க: 13A17, 12204,12205.