12873 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: ஜுன் 1983.

பொ.பாலசுந்தரம்பிள்ளை, இ.மதனாகரன் (ஆலோசக ஆசிரியர்கள்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுன் 1983. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 310, மணிக்கூண்டு கோபுர வீதி).

(6), 84 பக்கம், தகடுகள், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற் கழகம் வருடாந்தம் வெளியிடும் ஆய்விதழின் முதலாவது மலர் இது. யாழ்ப்பாணச் சுண்ணக்கற் பிரதேசத்தின் புவிப் பௌதிகவியல் (இ.மதனாகரன்), கன்னியா வெந்நீரூற்று (சு.செல்வநாயகம்), நில நீரின் உருவாக்கக் கொள்கைகளும் இலங்கையில் அதன் வளப்பரம்பலும் (ம.லியோன், றெவ்வல்), இலங்கையில் விவசாய நிலவுடமைகளின் அளவும் நில ஆட்சியும் (அ.கணதிபதிப்பிள்ளை), இலங்கையில் பசுமைப் புரட்சியில் நெல் உற்பத்தியும் பிரச்சினைகளும் (எஸ்.பி.சர்மா), யாழ்ப்பாணக் குடா நாட்டின் நெல் விளை நிலங்களின் வரள் பருவப் பயிர் செய்கை (செல்வி ப.கந்தசாமி), இலங்கையின் காட்டு வளமும் அதன் பொருளாதாரப் பின்னணியும் (செல்வி.ச.சற்குணதிலகம்), இலங்கையின் கைத்தொழில் வளர்ச்சியில் கைத்தொழில் கொள்கைகளின் பங்கு -1950ம் ஆண்டின் பின் (செல்வி ஜயந்தி அற்புதநாதன்), இலங்கை மீன்பிடியில் அண்மைக்காலப் போக்கு (க.கி.ஆறுமுகம்), இலங்கையின் குடிசனத்தொகை வளர்ச்சியும் பரம்பலும் மாற்றங்களும் (பொ.பாலசுந்தரம்பிள்ளை), இலங்கையில் இந்திய மக்களின் குடித்தொகை வேறுபாடும் குடிப் புள்ளியியல் மாதிரிகளும் (கா.குகபாலன்), தொலைவு நுகர்வு பற்றிய அறிமுகம் (எஸ். பாலச்சந்திரன்), இலங்கையின் மழைவீழ்ச்சி மாறுதன்மை பற்றிய ஆய்வுகளில் காணப்படும் சில முரண்பாடான முடிவுகள் (மா.புவனேஸ்வரன்), விமானப் படங்களுக்குரிய பொதுப்படையான வியாக்கியானம் (ளு.வு.டீ.இராஜேஸ்வரன்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31789. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 009735).

ஏனைய பதிவுகள்

Reasonable Wade Local casino

Content Betamo Gambling establishment: 20 Free Revolves No-deposit, Casitsu Casino: 29 100 percent free Revolves No-deposit To your elvis Frog Within the Las vegas Most