12876 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 4 (1986/1987).

P.குணரத்தினம் (இதழ் ஆசிரியர்), இரா.சிவச்சந்திரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: நியூ ஈரா பப்ளிக்கேஷன்ஸ் லிமிட்டெட்).

(12), 80 பக்கம், தகடுகள், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18.5 சமீ.

இவ்விதழில் புவியியல் கழக அறிக்கை 1986 – 87 (ஏ.அன்ரனிராஜன்), பிரதேச அபிவிருத்தி (இ.மதனாகரன்), திட்டமிடலில் வளமதிப்பீட்டு வழி முறைகள் (ஜி. றொபேட்), விவசாய அபிவிருத்தியில் காலநிலை (மா.புவனேஸ்வரன்), நில நீர்மட்ட நடத்தைகள் (ச.வீ.துருவசங்கரி), பிரதேச நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் (ளு.வு.டீ.இராஜேஸ்வரன்), பயிர் பன்முகப்படுத்துதல் (அ.கணபதிப்பிள்ளை), கிளிநொச்சி-இடப்பெயர்வும் குடியேற்றமும் (இ.கேந்திரேஸ்வரி), யாழ்ப்பாண மாநகர அபிவிருத்தி (பொ.பாலசுந்தரம்பிள்ளை), யாழ்ப்பாணத்தில் மீன்பிடித்தொழில் (கா.ரூபாமூர்த்தி), முல்லைத்தீவு கடல் வள உற்பத்தி (ச. முருகையா), விவசாயத் தொழிற்துறை விரிவாக்கம் (இரா.சிவசந்திரன்), குடித்தொகை இயக்கப் பண்புகள் (கா.குகபாலன்), உயிர்ச் சூழல் ஒழுங்கு (செ. பாலச்சந்திரன்), வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி (பொ.பாலசுந்தரம்பிள்ளை) ஆகிய படைப்பாக்கங்கள் இவ்வாய்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32272. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 009736).

ஏனைய பதிவுகள்

14898 நினைவலைகளில் வானொலிக் குயில்: ஒலிபரப்பாளர்களின் மனப்பதிவுகள்.

புஷ்பராணி சிவலிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 5: புஷ்பராணி சிவலிங்கம், 35/1, எட்மன்டன் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, மார்ச் 2013. (கொழும்பு 6: R.S.T. என்டர்பிரைசஸ், 14, W.A. சில்வா மாவத்தை). 164 பக்கம்,